Thursday, April 23, 2009

தானும் படுக்க மாட்டாங்க! தள்ளியும் படுக்க மாட்டாங்க...

ஒரு பதிவும் அதற்கான ஒரு பின்னூட்டமும்...

யாரோ அதிசா-ன்னு ஒரு பதிவர் சொல்றத கேளூங்க..

சரத்பாபு என்கிற பெயர் போன வாரம் வரைக்கு அத்தனை சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. நமக்கு தெரிந்த சரத்பாபு எப்போதும் ரஜினிக்கு நண்பனாய் நிறைய படங்களில் வருவார்.

வெள்ளைவெளேர் என பெட்ரமாக்ஸ் லைட்டின் மேன்டில் போல பளீர் என இருப்பார். எப்போதும் ரஜினிக்கு துரோகம் செய்து கிளைமாக்ஸில் திருந்தி தோஸ்த்தாகி விடுவார். போன வாரமென்று நினைக்கிறேன்.

தமிழ்மணத்தை மேயும் போது சரத்பாபு தென்சென்னையில் போட்டி என்கிற வாசகங்கள் கண்ணில் பட்டது. அட முத்து புகழ் சரத்பாபு சென்னையில் நிற்கிறாரா என வாயை பப்பராப்பா என பிழந்து கொண்டு கிளிக்கி படித்தேன். பிறகுதான் தெரிந்தது இந்த சரத்பாபு வேறு ஆள் என்று.

ஆனாலும் ஏனோ அந்த பதிவு அத்தனை சுவாரஸ்யமாய் இல்லை. லூசில் விட்டுவிட்டேன். சில நாட்களுக்குள் ஆளாளுக்கு சரத்பாபு ஒரு மகான், அவர் ஒரு சிகப்பு மனிதன், அவர் ஒரு எந்திரன் என்கிற ரேஞ்சில் பதிவுகள் போட்டு வந்ததை காணநேர்ந்தது.

யாருப்பா இந்த சரத்பாபு தமிழ்நாட்டில் இருக்கும் நாற்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் ஒரு தனி நபர். எந்த கட்சியும் சாராதவர் அல்லது சுயேட்சை. ஐஐஎம்மில் படித்து எம்பிஏ பட்டம் பெற்றவர். குடிசையில் வாழ்கிறவர்.

இந்தியாவை முன்னேற்ற! பல திட்டங்கள் வைத்திருக்கிறவர். ஆயுத எழுத்து சூர்யாவைப்போல அதிரடியாய் களம் இறங்கியிருக்கிறார்.

ஒருவன் ஏழ்மையில் படித்துவிட்டாதாலும் , சுயமாக தொழில் செய்து முன்னேறிவிட்டதாலுமே அவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று சொல்வது எத்தனை அபத்தம். பத்தாம் வகுப்பு படித்த ஒரு மிடில்கிளாஸ் இளைஞர் , பல வருடமாய் அரசியலிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறையுள்ள எங்கோ குமாஸ்தாவாய் பணிபுரிகின்ற ஒருவர் இது போல போட்டியிட்டால் நம்மில் எத்தனை இளைஞர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம்.

கட்சி சார்பு அரசியலுக்கும் இந்த ஐஐடி ஐஐஎம் இளைஞர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. நான் ஐஐடியில் படித்துவிட்டேன் , எனக்கு நிறைய ஆளுமைத்திறன் இருக்கிறது , இட்லிக்கடை வைத்து பலருக்கு வேலை தந்திருக்கிறேன் , நான் எம்பியானால் ஊரையே மாற்றுவேன் என்பது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது. இதையெல்லாம் புதிய கீதை என்கிற படத்தில் ஏற்கனேவே தேவையான அளவு அலசிவிட்டார்கள்.

இதோ இவருக்கான ஆதரவைத்தருகின்ற படித்தவர்கள் முன்வைக்கும் காரணம் என்ன ? படித்தவர் , பத்தாம்வகுப்பு வரை படிப்பது ஒரு படிப்பு கிடையாதா? . அப்படியானால் குறைந்த அளவு படித்த இளைஞர்கள்? அவர்களுக்கு சமூகப்பார்வை கிடையாதா ஆளுமைத்திறன் கிடையாதா..

தன் இளைமையில் கஷ்டப்பட்டு படித்துவிட்டதால் மட்டுமே ஒருவர் அரசியலுக்கு தகுதியானவர் என்று எதைக்கொண்டு இந்த படித்த மூளையுள்ளவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியவில்லை.

எந்த ஒரு அரசியல் பார்வையுமின்றி நடைமுறை சிக்கல்கள் குறித்து சற்றும் கவலையின்றி தான் படித்துவிட்டோம் என்கிற ஒரே தகுதியோடு முன்னிற்கிறார் இந்த இளைஞர்.

அதே தொகுதியில் இன்னும் சிலபல சுயேட்சை வேட்பாளர்களும் நிற்கக்கூடும். அவர்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு படித்தவர் அரசியலுக்கு வருவது இதுதான் முதல் முறை என்பதைப்போல ஒரு மாயையான பிம்பம் இங்கே உருவாக்கப்படுகிறது.

சரத்பாபு என்கிற ஒரு படித்த இளைஞர் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய ஒன்றுதான். பாராட்டுவோம் அவருக்கான நம் ஆதரவையும் தெரிவிப்போம். அதே வேளையில் பாராளுமன்றத்தேர்தல் குறித்து அறிந்து கொண்டு அவர் போட்டியிட்டிருக்கலாம். தென்சென்னைத்தொகுதி தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்று.

விருகம்பாக்கம்,சைதாப்பேட்டை,வேளச்சேரி,மடிப்பாக்கம், (இன்னும் நிறைய இருக்கிறது.. ) முதலான பல ஊர்களை உள்ளடக்கியது. இத்தனை ஊர்களைக் கொண்ட தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை மட்டும் பெற்று தோற்றுப்போவதைக்காட்டிலும் தனது சொந்த ஊரில் தனது ஏரியாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகையில் கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அந்த சில ஆயிரம் வாக்குகளை வைத்தே வெற்றிப்பெறலாமே. ஆழம் பார்த்து காலைவிடு என ஐந்தாம் வகுப்பிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. ஐஐஎம்மிலும் கட்டாயம் கற்றுத்தரப்பட்டிருக்கும்.

ஒரு படித்தவர். பண்புள்ளவர். துடிப்பான இளைஞர். தன்னை அரசியலில் முன்னிறுத்தும் துடிப்புள்ளவர். ஏன் அரசியலையும் அதன் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாமல் தான் தோற்றுப் போவது உறுதி (அவர் வெற்றி பெற 1 சதவீதம் கூட வாய்ப்பிலாதபோது) எனத்தெரிந்தும் , குருட்டுநம்பிக்கையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தலைவர் வடிவேலுவைப்போல , நான்கு பேர் ஏற்றிவிட்டதால் துடிப்பாய் அரசியல் கட்டதுரைகளிடம், ஏன் வீணாக தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அடிவாங்க ஆசைப்படுகிறார் என்பது புரியாத புதிர்.

அவரது தன்னம்பிக்கையையும் முடிவையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தனது உழைப்பையும் அறிவையும் கொஞ்சம் பொறுத்திருந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்திருக்கலாம்.

காதல் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு. சினிமாவிற்கு தகுதியில்லாத முக அமைப்புடையவர் என்கிற சினிமா அளவீட்டின்படியான ஒருவர் தான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அண்ணன் தம்பி அமெரிக்க மாப்பிள்ளைகளாகவெல்லாம் முடியாது என்பார். அதைப்போலத்தான் இருக்கிறது சரத்பாபுவின் செயலும்.

இது போன்ற இளைஞர்கள் தங்களது செல்வாக்கையும் அறிவையும் முயற்சியையும் ஆக்கப்பூர்வமான விடயங்களில் ( வெற்றிபெறக்கூடிய) ஈடுபட்டு இந்தியாவை முன்னேற்றலாம். நூறு சதவீதம் தோற்றுப்போகக்கூடிய விடயத்தில் ஈடுபட்டு பின் தோற்றும் போய் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு என்னை இந்த மடசமுதாயம் ஏற்கவில்லை. என்னை தோற்கடித்துவிட்டது என்று புழுங்கி மண்ணாய் போவது எத்தனை மோசமான ஒன்று.

இதோ அந்த பாதையை நோக்கி இன்னும் ஒரு இளைஞன். அவனுக்கு பின்னால் நூற்றுக்கணக்காய் வழி தெரியாத ஆடுகளைப்போல மேலும் பல இளைஞர்கள். அரசியலில் வெற்றி பெறுவது அத்தனை எளிதானது அல்ல என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிற ஆதங்கமே என்னை இந்த பதிவை எழுதத்தூண்டியது. சரியான வழிகாட்டுதலின்றி அரசியலை தவறாய் புரிந்து கொண்டு தோற்றுப்போய் பின் வெக்ஸ் ஆகி பழைய வாழ்க்கைக்கே திரும்பிய ஆயிரணக்கணக்கான இளைஞர்களில் இன்னும் ஒருவன்.

அரசியலில் ஈடுபட முனையும் இளைஞர்கள் முதலில் அது குறித்து அறிந்து கொள்ளலாம். இங்கே வெற்றி பெறத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உங்கள் கோடாரிகளை கூர்த்தீட்டிக்கொள்ளலாம். எம்பிஏ படித்த இளைஞருக்கு சொல்லித் தரவேண்டியதில்லை எந்த ஒரு செயலையும் முன்னதாகவே சரியாக திட்டமிட்டு செய்யவேண்டுமென்று.. அதை வடிவேலுவே சொல்லித்தந்திருக்கிறார் எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்று.

ஏத்திவிட்டு ஏத்திவிட்டே உடம்ப ரணகளம் ஆக்குறதே இந்த பயலுகளுக்கு வேலையா போச்சு.. என்பதாகத்தான் இருக்கிறது சரத்பாபுவின் மீதான இளைஞர்களின் ஆதரவும்.


*******************************************************************************
இப்போ இதையும் படிங்க...

//சர்க்கரை சுரேசு//

எல்லாரும் இதுக்கு முன்னாடி செஞ்சு தோற்று போய்ட்டாங்க...
அது எல்லாம் நடக்காதுனு நீங்க சொல்லுவது தப்புய்யா...

இந்தியா 1983 வோர்ல்ட் கப் விளையாடும் போது இந்தியா ஜெயிக்கும் என்று சொன்னால் உங்கள மாதிரி தான் எல்லாரும் சிரித்து நகையாடி இருப்பாங்க ...

லூஸா நீ! கூட கேட்டு இருப்பாங்க...

ஆனா ஒரு (Underdogs) என்று சொல்ல படும் அதாவது ஜெயிக்க முடியாது என்று சொல்லப்படும் ஒரு அணி செய்தது ஒரு ஹிஸ்டரி...

அதுக்கு அப்புறம் முடியவே முடியாது என்று மார் தட்டும் விமர்சகர்கள் பாரட்டுவது இயல்பே...

அட 1% கூட சாத்தியம் இல்லை என்றே வையுங்க அவருக்கு...
ஆதரவு சொல்லுவதில் தப்பு இல்லையே...

யாரும் ஆட்டு மந்தைபோல் போகவில்லை...
அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு பின் அவரின் தன்னம்பிக்கை பார்த்தே இந்த ஆதரவு...

மக்கா அவரிடம் உள்ள தைரியம் பல பேரிடம் இல்லை, வெட்டி வம்பு ரவுடி இல்லை அவர், அவர் படிப்பு மட்டுமே காரணம் இல்லை...

இது வரை அரசியலில் மிக பெரிய ஏமாற்று வேலை நடந்து வருது..

அதை மாற்ற நம்மாலும் முடிவது இல்லை.. வந்த வரையும் எதுக்கு வந்த பேசாம போய் வீட்டுல இரு... நாடு திருந்தாது... உதவாது.. நீயும் என்னை மாதிரி பதிவு போடு...
சம்பளம் வாங்கி சாதரண வாழ்கை வாழு...

எதுக்கு இந்த முயற்சி..

நாங்களும் வர மாட்டோம் வந்தவனை நொல்லை சொல்லியே காலத்தை ஒட்டுவோம்..
என்ன ஒரு வில்லத்தனம்...

ஒரு இளைஞனை ஆதரிக்க ஒரு இளைஞனிடம் பக்குவம் இல்லை...
ஒற்றுமை இல்லை...

அட போங்கயா கைப்புள்ளைனு சொல்லி காமெடி வேற..

MR.சரத்பாபு எதுக்கு அரசியலுக்கு வந்தீங்க? மக்கள் எல்லாம் நாங்க பழைய கட்சிக்கு தான் போடுவோம். நீங்க நின்னா உங்கள எதிர்த்து பதிவு போடுவோம்...

யாரும் முடியாது. இப்படி காந்தி நினைத்து இருந்தால், அந்த ஒல்லி மனிதன் பின்னாடி நாடு வராது தம்பி...

நல்ல வேளை நீங்க எல்லாம் அப்பவே இல்லை. இருந்து இருந்தா,
காந்தி ஒரு கைபுள்ள..
ஆங்கிலேயே பீரங்கி படை ஆயுதத்தை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாது.

நீங்க ஒரு ஒல்லி , படித்த பையன் உங்க கிட்ட உடம்புல சக்தி இல்லை, 4 பேரு ஆட்டு மந்தை போல் வந்துட்டா சுதந்திரம் வந்துடுமா என்று சொல்லி இந்தியாவை அடிமையாய் வைத்து இருப்பிங்க..

வாழ்க தமிழன்! ஒரு தவளையின் கதை போல் தானும் முன்னேற மாட்டான்! செய்யுறவனையும் விடமாட்டான் நம்ம தமிழன்....

அடப்போங்கையா.....

8 comments:

Suresh said...

உங்க பதிவு ;) கலக்கல் தான் ஹா ஹா
ஆனா நிங்க என் கருத்தையும் பதிவாய் போட்டதை என்னிடமே சொல்லல பத்திங்களா ;)

நானா உங்க பின்னூட்டத்தை பார்த்து
//"sarathy has left a new comment on your post "சரத்பாபுவுக்கு வெற்றி நிச்சியம் - கலக்கல் அலசல்.":

50 வது பதிவு அருமையாய் அமைய வாழ்த்துக்கள்.. "//

உங்க பதிவை படிக்க வந்தா ஆச்சிரியம் என் பின்னூட்டத்தின் பதில் பதிவாய் ... நல்ல விஷியம் தான் நண்பா உங்கள மாதிரி நல்லவங்க ஆதரவு இருக்கிற வரை நம்ம இளைஞர்கள் ஜெயிப்போம் ...

வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள் என் நண்பரிகளிடம் உங்க பதிவை பற்றி சொல்கிறேன்

இதுக்கு முன்னாடி எனக்கு உங்கள தெரியாது ஆனா உண்மைக்கு ஒரு பதிவை போட்டு இளைஞன் மீதி நல்ல நம்பிக்கை வர வச்சிடிங்க நண்பா

நன்றி அன்புடன்
சுரேஷ்

Here after i am ur follower of your blog nanba, Please add your blog to tamilish and tamilmanam where many can read your posts here after...

Keep publishing good posts, i will read your old posts :-) also

Good to meet you..Keep smiling

Suresh said...

Many of the good comments were not published by him and lucky... i stopped reading their blogs after this incident, so far i have read only one post from their blog that is about sharath babu

I got a wonderful interview from sarath will post soon thalaiva

டக்ளஸ்....... said...

இதுக்கு பேருதான் நோகாமா நோம்பு கொண்டாடுறதா?

Anonymous said...

Winning election is not simple thing in present that too in TN kind of states where money plays major role. And also we should remember that party which has been existing more than 30 years and politician who have been successively winning election doesn't take every election so granted. There are many factors which decide every election results.
What is wrong if a IIM or IIT candidate contest election. It doesn't mean that every IIT or IIM has strong administration skill and they are only quite eligible to govern. Even a 10th standard passed out with proper exposure to our society and concerns will be able to perform better than IIM candidate. At the same we should not forget the fact that many candidates contesting as of now from the well known political parties are having basic qualification as you mentioned, but with good exposure on running a country liquor shop, wine shop , Sand Quarry with lot of smuggling experience, from a particular cast background and so on.
On his own Sarath has taken this risk, may be loosing some money if he is not going to win this
election. There is nothing wrong giving a try where you want serve for your people, not for your own and your family. If everyone sit back and think, its not simple thing win MP seat than at no point of time we can change the fate of TN and India.
Giving hype to such candidate should be encouraged. No body likes to listen heps given to MK and JJ speeches taunting each other.
My kind request to Sarath, plse don't spend your personal money. Put your best effort to reach everyone in the constituency and explain what the best you can do for he people if you are given a chance. Rest is in their hands to decide.

Samora

sarathy said...

நான் பல நாட்களா உங்கள் சக்கர கடைக்கு வந்துட்டு தான் இருக்கிறேன்..

நல்ல விசயத்துக்கு விளம்பரம் தேவை இல்லை சுரேஸ், நிச்சயம் உங்கள் உழைப்பு வீண் போகாது..
வெற்றி தோல்வி அப்புறந்தான்...
முதலில் களம் காணுங்கள்..

sarathy said...

//samora
There is nothing wrong giving a try where you want serve for your people, not for your own and your family. If everyone sit back and think, its not simple thing win MP seat than at no point of time we can change the fate of TN and India.//

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க...
சமோரா...

Suresh said...

சாரதி உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்க்கும் ரொம்ப நன்றி தலைவா. கண்டிப்பா உழைப்போம்... உங்கள மாதிரி மக்களின் கருத்துகள் என்னை மென் மெலும் உழைக்க வைக்கும் ஊக்க சக்தி..

;-) களம் காணுவோம்

ganesh said...

மக்கா..... அரசியலே தெரியாதுன்னு என்னா போடு போடுறாருய்யா!....

அரசியலில் ஈடுபட முனையும் இளைஞர்கள் முதலில் அது குறித்து அறிந்து கொள்ளலாம். இங்கே வெற்றி பெறத் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உங்கள் கோடாரிகளை கூர்த்தீட்டிக்கொள்ளலாம். எம்பிஏ படித்த இளைஞருக்கு சொல்லித் தரவேண்டியதில்லை எந்த ஒரு செயலையும் முன்னதாகவே சரியாக திட்டமிட்டு செய்யவேண்டுமென்று..

//ஐயா....நம் நாட்டில் படித்த முட்டாள்களும் உண்டு என்பதை மற்க்க வேண்டாம்...... அரசியலுக்கு அனுபவம் மட்டுமே பெரிய தகுதி என்பது என் கூற்று.... ஐயா கருணாநிதி எந்த collega la MBA படிச்சாரு......//

ஏத்திவிட்டு ஏத்திவிட்டே உடம்ப ரணகளம் ஆக்குறதே இந்த பயலுகளுக்கு வேலையா போச்சு.. என்பதாகத்தான் இருக்கிறது சரத்பாபுவின் மீதான இளைஞர்களின் ஆதரவும்.
எங்கள் ஓட்டு இனி நம்ம சாரதி க்கே! எங்கள் ஓட்டு இனி நம்ம சாரதி க்கே! எங்கள் ஓட்டு இனி நம்ம சாரதி க்கே!

ஏத்தி விட்டுடுவோமா டீ லுல....

செய்தியோடை...