Monday, April 27, 2009

வெக்கங்கெட்டவன் சோறு கேட்டானாம் தின்னுட்டு செத்து போக!
கல்யாணத்த பண்ணிக்கிட்டு பிள்ளைய பெத்து போட வேண்டிய வயசுல பாலைவனத்துல வந்து
காஞ்சு கிடக்கிறோமேன்னு பல நாள் வருத்தப்பட்டதுண்டு..

என்னோட பாஸ் (அரேபியர்) ஒரு நாலு நாள் லீவ போட்டுட்டு குடும்பங்குட்டியோட
திடீர்னு வெளியூர் போயிட்டாரு..

இந்த கேப்ல வேற ஒரு குருப் கூட சேர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை...

என்னோட நேரம் அந்த குருப்ல பூராப்பயல்களும் பிலிப்பைன்ஸ்காரன்...

நம்ம காலை கடிக்கிற செருப்பு மாதிரி கூடவே வரும் அவனுங்களுக்கு விளக்கம் சொல்லியே
அலுத்து போயிட்டேன்...

அடிக்கிற வெயில்ல எருமமாடு மாதிரி நிக்கிறானுங்க...
என்னையும் நிக்க சொல்லுறானுங்க...

இந்த லட்சணத்துல அதை முடிக்கலையா? இதை முடிக்கலையா னு கேள்வி வேற..

போங்கடா னு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்துட்டேன்...

போனப்போகுதுனு உதவி செஞ்சா ஓனர் மாதிரி கேள்வி கேக்குறான்...

"வெக்கங்கெட்டவன் சோறு கேட்டானாம்
தின்னுட்டு செத்து போக!"

"அப்புறம் கொஞ்சம் சோறு கேட்டானாம்
பொண்டாட்டிக்கு கொண்டு போக!"


10 x 13 = எவ்ளோடானு நீங்க கேட்டீங்கன்னா சுமார் பத்து நிமிசம் கணக்கு போட்டுட்டு
23 னு பதில் சொல்லும் கழுத(கணித)புலிகள்...

நாளைக்கு என்னோட தலைவர் வந்துடுவார்.. அவனுங்க தொல்லை ஒழிஞ்சது...

என்னையும் மதிச்சு நான் எழுதுறதையும் படிக்க
வழக்கமா எனக்கு தெரிஞ்ச நாலு பேர் தான் வருவாங்க...

ஆனால் நேற்று ஒரே நாள்ல "சர்க்கரை சுரேசு" புண்ணியத்துல
100 பேருக்குமேல வந்து பார்த்துட்டு போறாங்க...

என் கல்லூரி கால நண்பர்களுக்காகவே இதுவரை பதிவெழுதி வந்தேன்...
இனிமே கொஞ்சம் கவனமா எழுதனும் போலிருக்கு..

மண்டைய பிளக்குற வெயிலும்,அதிகமான வேலைப்பளுவும்
என் மூளையை மழுங்கச்செய்தாலும் எதுனா உருப்படியா எழுத முயற்சி பண்றேன்...

அப்புறம் மேல உள்ள பழமொழிக்கு விளக்கமெல்லாம் கேட்க கூடாது...
பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..

திரு.சுரேஸ் அவர்கள் நம்ம சரத்பாபு பற்றி வெளியிட்ட 50 வது சிறப்பு பதிவை பார்க்கனுமா?
ரகளையான பதிவு...

http://sureshstories.blogspot.com/2009/04/50-sakkarais-50th-post-exclusive_27.html

11 comments:

ராஜ நடராஜன் said...

தலைப்பு சிரிக்க வைக்குது:)))

சாரதி said...

//தலைப்பு சிரிக்க வைக்குது:))//

வாங்க.. ராஜ நடராஜன்... இங்கே வாழ்க்கையே சிரிப்பா சிரிக்குது...

Suresh said...

//என்னோட நேரம் அந்த குருப்ல பூராப்பயல்களும் பிலிப்பைன்ஸ்காரன்..//

ஏன் பிலிப்பைஸ்காரிகள் வேணுமோ ;)

Suresh said...

//அடிக்கிற வெயில்ல எருமமாடு மாதிரி நிக்கிறானுங்க...
என்னையும் நிக்க சொல்லுறானுங்க...//

ஒரு வேளை நம்ம அப்படினு கண்டு புடிச்சுடாங்களோ

//இந்த லட்சணத்துல அதை முடிக்கலையா? இதை முடிக்கலையா னு கேள்வி வேற..//

ஹா ஹா ரொம்ப நோவ அடிச்சுடாங்க போல

//போங்கடா னு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்துட்டேன்...//

நிங்க சிங்கம் மச்சான்

போனப்போகுதுனு உதவி செஞ்சா ஓனர் மாதிரி கேள்வி கேக்குறான்...

//"வெக்கங்கெட்டவன் சோறு கேட்டானாம்
தின்னுட்டு செத்து போக!"

"அப்புறம் கொஞ்சம் சோறு கேட்டானாம்
பொண்டாட்டிக்கு கொண்டு போக!"//

ஆஹா என்னா பழமொழி ..:-)

Suresh said...

//என்னையும் மதிச்சு நான் எழுதுறதையும் படிக்க
வழக்கமா எனக்கு தெரிஞ்ச நாலு பேர் தான் வருவாங்க...

ஆனால் நேற்று ஒரே நாள்ல "சர்க்கரை சுரேசு" புண்ணியத்துல
100 பேருக்குமேல வந்து பார்த்துட்டு போறாங்க...///

அது எல்லாம் சும்மா மச்சான் நீ நல்லா எழுதின அதான் வந்தாங்க ... அப்புறம் என்றும் நல்ல பதிவை மக்கள் பகிர்ந்து கொண்டு மச்சான்ஸ் படித்து பாருங்க என்று சொல்வார்கள் நான் உட்பட அவ்வளவு தான்..

உங்க பதிவு நல்லா இருந்து வந்தாங்க சக்கரை எல்லாம் ஒன்னும் செய்யல நான் நல்லா இருந்தது என்று என் நண்பர்களிடம் மட்டும் சொன்னேன்

Suresh said...

//என் கல்லூரி கால நண்பர்களுக்காகவே இதுவரை பதிவெழுதி வந்தேன்...
இனிமே கொஞ்சம் கவனமா எழுதனும் போலிருக்கு..
/

நீ எப்போதும் போல ஜாலியா எழுது நல்ல பதிவுகளை படி ( என் பதிவு மொக்கை ) அதறக்கு உன் கருத்துகளை பகிர் மக்கள் உன் நல்ல பதிவை படிப்பார்கள், புதியவர்களுக்கு பின்னூட்டம் இடு .. சரி போதும் அட்வைஸ் எனக்கு பிடிக்காத ஒன்னு ..

நீ எப்போதும் போல் நல்லா எழுது

வாழ்த்துகள்

அபுஅஃப்ஸர் said...

நல்லாயிருக்கு தல‌

பாலைவன வெயில்லேயும் வியர்வை சொட்ட பிளாக் எழுதிரியே வாழ்த்துக்கள் மச்சான்

நல்லா எழுது

அப்புறம் முதலாளியை கேட்டதா சொல்லு

அபுஅஃப்ஸர் said...

//கல்யாணத்த பண்ணிக்கிட்டு பிள்ளைய பெத்து போட வேண்டிய வயசுல பாலைவனத்துல வந்து
காஞ்சு கிடக்கிறோமேன்னு பல நாள் வருத்தப்பட்டதுண்டு..
//

புரியுது... வூட்டு போன் நம்பர் கொடுத்தா கொஞ்சம் ரெகமெண்ட் பண்ணுவேன்

sarathy said...

//அபுஅஃப்ஸர் said...

புரியுது... வூட்டு போன் நம்பர் கொடுத்தா கொஞ்சம் ரெகமெண்ட் பண்ணுவேன்//

உங்களோட "நிர்வாண இரவுகள்" படிச்சிட்டு மிரண்டு போயி இருக்கேன்.. இது வேறயா?

sarathy said...

//Suresh said...
நீ எப்போதும் போல ஜாலியா எழுது. நல்ல பதிவுகளை படி. மக்கள் உன் நல்ல பதிவை படிப்பார்கள், புதியவர்களுக்கு பின்னூட்டம் இடு ..//


நன்றி நண்பா...
கண்டிப்பா செய்றேன்..

sarathy said...

//Suresh said...
ஏன் பிலிப்பைஸ்காரிகள் வேணுமோ ;)//

ஆமா அது ஒன்னு தான் குறைச்சல்...

மக வாழுற வாழ்க்கைக்கு மாசம் எட்டு கட்டு விளக்கமாரு தேவையா???

(விளக்கமாரு=துடைப்பம்)
பின்னூட்டத்துக்கு பின்விளக்கம் வேறு..

செய்தியோடை...