Sunday, July 12, 2009

வேண்டும் சென்னைக்கும் ஒரு பால்தாக்கரே!


எண்ணெய் முதலைகளின்
பண்ணையில் அடைத்து
பலரைக் கொன்றும்
கொடும்பசி தீராமல்
கோரப் பற்களில் எச்சில் ஒழுக
புன்னகைக்கிறான்...

கையில் பாஸ்போர்ட்டும்
கழனி விற்ற காசுமாய்
நிற்கும் தமிழனை பார்த்து
சென்னையில் கடைவிரித்த
கொல்லத்துக்காரன்...

முற்றுப்புள்ளி இல்லாத இந்த
ஒற்றை வரியில்
குருரமாய் புன்னகைக்கும் இவனை போன்ற பலரை
விரட்டியடிக்க சென்னையின் "பால்தாக்கரே" எவரும் இல்லையா?

நிமிடத்திற்கு 15 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை...
இங்கிருப்பவர்களிடம் போனில் நன்றாக விசாரித்துவிட்டு வாருங்கள்
இளைஞர்களே!

சமிபத்தில் நான் சந்தித்த நம்ம ஊர் இளைஞன் ஒருவரின்
சோககதையால் எழுதிய பதிவு.
அவர் இங்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது.
அவரோடு சேர்ந்து இன்னும் சிலரும் வந்திருக்கிறார்கள்..
பெரிய கம்பெனி என்ற போர்வையில் அழைத்துவரப்பட்ட
அவர்களுக்கு வந்தபின் தான் தெரிந்தது அது
ஒன்றுக்கும் உதவாத உப்புமா கம்பெனி..
இதுவரை சம்பளம் தரவில்லை..
சாப்பாட்டுக்கு கூட சிரமம்.
வாரத்திற்கு ஒரு இண்டர்வியுவிற்கு அனுப்புவார்கள்.
அங்கும் இவர்களைப் போல் பலரும் வந்து நிற்க
இதுவரை வேலையில்லை.
எங்களால் முயன்ற உதவிகளை செய்தோம்..

இதில் என்ன கொடுமை என்னவென்றால் அந்த இளைஞர்
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படித்த
மெக்கானிக்கல் இஞ்சினியர்.
2 வருடம் மத்தியபிரதேசத்தில் பணிபுரிந்தவர்.
கம்பெனியின் இணையதளத்தை கண்டு ஏமாந்து விட்டதாக
புலம்ப மட்டுமே முடிகிறது அவரால்.

நாகரிகம் கருதி சில விசயங்களை வெளியிடவில்லை.
இங்கிருந்து வெளியேறவும் விசா வேண்டும்
என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பலத்த யோசனைக்கு பிறகே இதனை பதிவிட்டேன்

என்னை சுற்றியும் நம் அண்டை மாநிலத்தவரின்
ஆதிக்கம் அதிகமுண்டு.


.

31 comments:

நட்புடன் ஜமால் said...

நிமிடத்திற்கு 15 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை...
இங்கிருப்பவர்களிடம் போனில் நன்றாக விசாரித்துவிட்டு வாருங்கள்
இளைஞர்களே!\\


ரொம்ப வருத்தமா தான் இருக்கு சாரதி

sakthi said...

முற்றுப்புள்ளி இல்லாத இந்த
ஒற்றை வரியில்
குருரமாய் புன்னகைக்கும் இவனை போன்ற பலரை
விரட்டியடிக்க சென்னையின் "பால்தாக்கரே" எவரும் இல்லையா?

சரியான கேள்வி

ஆனால் பதில் என்னவோ இல்லை என்பதே....

நாகா said...

மெத்தப் படித்தவர்களே தீர விசாரிப்பதில்லை, அன்னாடங்காச்சிகளின் நிலை? வருந்துகிறேன் சாரதி

இய‌ற்கை said...

:-(

பிரியமுடன்.........வசந்த் said...

சார தீ யாக ஏவுகணைகள்

சூடான போஸ்ட் சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

தன் வீட்டில் அடுப்பெரிய தன்னையே எரித்துக்கொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம். சாட்டையடி சாரதி.

குப்பன்_யாஹூ said...

Useful Post. If time permits I will print out our blog and paste near that Dubakoor HR consultancy agency.

Anonymous said...

இது யார் தவறு???? இந்தியாவில் சில வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலை... ஆனால் நீங்கள்... அயல்நாட்டு மோகத்தில்... அங்கே போய்விட்டு 'பால்தாகரே' வை விளிக்கிறீர்கள்...

தமிழ். சரவணன் said...

இதுபோல் குள்ளநரிகளிடம் சிக்கிக்கொள்ளும் கோழிக்குஞ்சுகள் ஏராளம் அதிலும் படிப்பு முடித்து வேலைதேடும் இளைஞர்களும் அவருடைய பெற்றோர்களும் ஜோசியக்கார கிளி சொல்வதையும் நம்பி ஏமாறுவார்கள்...

தமிழரசி said...

உன் எண்ணத்தின் தாக்கம் வலிமை சாரதி...
அபலையாய் சிக்கிக் கொண்டு அல்லல் படும் இளைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...

andygarcia said...

எதனால் டுபாக்கூர்,சரியா புரியவில்லை,கொஞ்சம் விளக்கவும்

செந்தழல் ரவி said...

why you blocked out the address _

வினோத்கெளதம் said...

சாரதி நிலைமையை அப்படியே எடுத்துரைத்து உள்ளாய்..
இந்த பாலைவன தேசத்தை விட்டு எப்போ வீட்டுக்கு போவோம்னு இருக்கு..

sarathy said...

// நட்புடன் ஜமால் said...
ரொம்ப வருத்தமா தான் இருக்கு சாரதி //

சமிபத்தில் நான் சந்தித்த நம்ம ஊர் இளைஞர் ஒருவரின்
சோககதையால் எழுதிய பதிவு.

sarathy said...

// sakthi said...
சரியான கேள்வி
ஆனால் பதில் என்னவோ இல்லை என்பதே.... //

என்ன செய்வது சக்தி, உள்ளூரிலேயே முதலாளியாய் இருந்திருக்கலாம்..
வெளியூரில் அடிமையாய்..

sarathy said...

// நாகா said...
மெத்தப் படித்தவர்களே தீர விசாரிப்பதில்லை, அன்னாடங்காச்சிகளின் நிலை? வருந்துகிறேன் சாரதி //

உண்மைதான் நாகா..
இவனுங்க எல்லாத்தையும் இனிக்க இனிக்க பொய் சொல்லி அனுப்பி வச்சிடுறானுங்க.

sarathy said...

// இய‌ற்கை said...
:-( //

:-()
நன்றி.

sarathy said...
This comment has been removed by the author.
sarathy said...

// S.A. நவாஸுதீன் said...
தன் வீட்டில் அடுப்பெரிய தன்னையே எரித்துக்கொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம். சாட்டையடி சாரதி.//

தினம் தினம் பார்ப்பதால் உங்களுக்கு தெரிந்திருக்கிறது நவாஸ்...

sarathy said...

// குப்பன்_யாஹூ said...
Useful Post. If time permits I will print out our blog and paste near that Dubakoor HR consultancy agency.//

with pleasure..
கண்டிப்பாக செய்யுங்கள்.

sarathy said...

// Anonymous said...
இது யார் தவறு???? இந்தியாவில் சில வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலை... ஆனால் நீங்கள்... அயல்நாட்டு மோகத்தில்... அங்கே போய்விட்டு 'பால்தாகரே' வை விளிக்கிறீர்கள்... //

இதற்கான பதிலை உங்கள் பெயர் கண்டால் நிச்சயம் சொல்வேன்..

sarathy said...

// தமிழ். சரவணன் said...
இதுபோல் குள்ளநரிகளிடம் சிக்கிக்கொள்ளும் கோழிக்குஞ்சுகள் ஏராளம் அதிலும் படிப்பு முடித்து வேலைதேடும் இளைஞர்களும் அவருடைய பெற்றோர்களும் ஜோசியக்கார கிளி சொல்வதையும் நம்பி ஏமாறுவார்கள்... //

கலர் கலரா வெப்சைட் ஆரம்பிச்சு கண்டதையெல்லாம் போட்டு ஏமாத்திடுறானுங்க.

sarathy said...

// தமிழரசி said...
உன் எண்ணத்தின் தாக்கம் வலிமை சாரதி...
அபலையாய் சிக்கிக் கொண்டு அல்லல் படும் இளைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்... //

நன்றி தமிழ்...

sarathy said...

// andygarcia said...
எதனால் டுபாக்கூர்,சரியா புரியவில்லை,கொஞ்சம் விளக்கவும் //

கண்டிப்பா சொல்றேன்.

sarathy said...

// செந்தழல் ரவி said...
why you blocked out the address _ //

உங்களின் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.
படத்தில் உள்ள விளம்பரம் இணையத்தில் எடுத்தது...

ஆனால்
சமிபத்தில் நான் சந்தித்த நம்ம ஊர் இளைஞன் ஒருவரின்
சோககதையால் எழுதிய பதிவு.
அவர் இங்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது.
அவரோடு சேர்ந்து இன்னும் சிலரும் வந்திருக்கிறார்கள்..
பெரிய கம்பெனி என்ற போர்வையில் அழைத்துவரப்பட்ட
அவர்களுக்கு வந்தபின் தான் தெரிந்தது அது
ஒன்றுக்கும் உதவாத உப்புமா கம்பெனி..
இதுவரை சம்பளம் தரவில்லை..
சாப்பாட்டுக்கு கூட சிரமம்.
வாரத்திற்கு ஒரு இண்டர்வியுவிற்கு அனுப்புவார்கள்.
அங்கும் இவர்களைப் போல் பலரும் வந்து நிற்க
இதுவரை வேலையில்லை.
எங்களால் முயன்ற உதவிகளை செய்தோம்..
.
இதில் என்ன கொடுமை என்னவென்றால் அந்த இளைஞர்
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படித்த
மெக்கானிக்கல் இஞ்சினியர்.
2 வருடம் மத்தியபிரதேசத்தில் பணிபுரிந்தவர்.
கம்பெனியின் இணையதளத்தை கண்டு ஏமாந்து விட்டதாக
புலம்ப மட்டுமே முடிகிறது அவரால்.

நாகரிகம் கருதி சில விசயங்களை வெளியிடவில்லை.
இங்கிருந்து வெளியேறவும் விசா வேன்டும்
என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பலத்த யோசனைக்கு பிறகே இதனை பதிவிட்டேன்

என்னை சுற்றியும் நம் அண்டை மாநிலத்தவரின்
ஆதிக்கம் அதிகமுண்டு.

விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி தரவும்.

பிரியமுடன்.........வசந்த் said...

//// பிரியமுடன்.........வசந்த் said...
சார தீ யாக ஏவுகணைகள்

சூடான போஸ்ட் சூப்பர் //

விளம்பரத்திற்காக போடப்பட்ட பதிவில்லை நண்பா, விழிப்புணர்வுக்கு மட்டுமே..
நன்றி.//

தங்கள் தளத்தில் வந்து பின்னூட்டமிட்டு விளம்பரம் செய்யும் நானில்லை நண்பா இடுகை நல்லா இருந்ததுன்னு சொன்னது தவறா?

வேறு எதையும் கூறும் நிலையில் நானில்லை நானும் வெளினாட்டில் இருப்பதால்.............

sarathy said...

தவறாக நினைக்க வேண்டாம் வசந்த்.
புரிதலில் தான் தவறு...
மன்னிக்கவும்.

sarathy said...

// வினோத்கெளதம் said...
சாரதி நிலைமையை அப்படியே எடுத்துரைத்து உள்ளாய்..
இந்த பாலைவன தேசத்தை விட்டு எப்போ வீட்டுக்கு போவோம்னு இருக்கு..//

நன்றி வினோத்கௌதம்...
எனக்கும் அப்படி தான் இருக்கிறது.

Anonymous said...

Very good information sarathy, i continously watching your website.
i am also from tamil nadu ( now in al-khobar), My friend did same things before three months
His information below
Name: XXXX
BE holder (75% mechanical)
no experience
visa charge RS 60000
no accombation and food
monthly salary SR 1800
reputed company name: toupas Gulf, al-jubail

பிரியமுடன்.........வசந்த் said...

இங்கே வந்து பெற்று கொள்ளுங்கள்

http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_15.html

Suresh said...

நண்பா என் நண்பனும் இதற்க்கு எல்லாம் நேரடியாக பாதிக்கபட்டுள்ளான் இதை பற்றி ஒரு கதை பதிவாய் போடலாம் என்று இருந்தேன்..

செம சாட்டை அடி உண்மை சொன்னால் போலிஸ் அரசு அதிகாரிகள் எல்லாம் வேஸ்ட் குப்பை ... காசை வாங்கிட்டு விட்டுடாங்க

செய்தியோடை...