
கடைசியாக மும்பை "மாதுங்கா" இரயில்வே ஸ்டேசனில் பளிச்சென்று ஒரு பெண்ணை
வெகுஅருகில் பார்த்ததாக நினைவிருக்கிறது.
அதன்பிறகு கடந்த 450 நாட்களாக எந்த ஒரு பெண்ணின்
முகத்தையும் இதுவரை பார்க்கவே இல்லை.
சற்று யோசித்து பாருங்கள்,வீட்டிலும் உங்களைச் சுற்றி ஆண்கள்,
தெருவில் இறங்கி நடந்தால் அங்கேயும் ஆண்கள்,
பணிபுரியும் அலுவலகத்திலும் அனைவரும் ஆண்கள்,
அதுமட்டுமில்லாது உணவகங்கள், வாகனங்கள்,
ஏன் பூங்காக்கள் உட்பட நாம் போகும் அனைத்து
இடங்களிலும் ஆண்களே நீக்கமற நிறைந்து இருந்தால்
வாழ்க்கை எப்படி இருக்கும்?
அப்படி தான் இருக்கிறது இங்கு எங்கள் வாழ்க்கை...
இது சதையைப் பற்றிய புலம்பல்கள் அல்ல.
மனம் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமே.
தொலைக்காட்சியும் இணையமும் இன்னபிற இருட்டு வகையறாக்களும்
தான் பெண்களை பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு தந்தன.
எங்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள ஷாப்பிங் மால்களில்
எப்போதாவது பர்தா அணியாத ஒருசில அமெரிக்ககாரிகளையும்,
பிரிட்டிஷ்காரிகளையும் பார்த்ததுண்டு.
ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒருவிதமான ஆண்தன்மையோடு
பெண்மையின் நளினத்தை தொலைத்தவர்களாகவே இருந்தார்கள்.
இங்கு பெண்களை பார்க்ககூடிய ஒரே இடம்
மருத்துவமனைகள் தான்..
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மற்றும் கேரளாவை
சேர்ந்த ஏராளமான செவிலித்தாய்கள் பணிபுரிகிறார்கள்.
அவர்களை பார்ப்பதற்காகவே அடிக்கடி நோய்வாய்ப்படும்
நண்பர்களும் சிலர் உண்டு.
தமிழகத்தை சேர்ந்த பெண்கள் யாரும் இங்கே வேலைக்கு
வருவதில்லையாம்.
அதுவும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான்.
உள்ளூர் பெண்களுக்கு மட்டுமே இது பாதுகாப்பான தேசம்.
மற்றவர்களுக்கு????
Simulation-ல் மட்டுமே பார்க்கும் அவர்களை நேரில்
பார்க்கும் நாள் எந்நாளோ?
இப்போதெல்லாம் எங்கள் கனவில் கூட முரட்டு தாடியுடன்
வரும் அரேபியர்களே அதிகம் ஆக்கிரமிக்கிறார்கள்.
அழகு என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாத தேசத்தில்
"சாப்பிட்டியா சாரதி?" எனத் தொலைபேசி வழியாக
பரிவோடு கேட்கும் அந்த ஒற்றை பெண்குரல் தான்
என்னை இன்னும் உயிரோடும் உணர்வோடும் வைத்திருக்கிறது.
எனவே மக்களே!
பெண்கள் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்க வேண்டாம்..
16 comments:
நெம்ப கஷ்டந்தான்... :-)
அந்த ஒற்றை பெண் குரல் அம்மவா? அந்த ஊரில கண்டிப்பா பர்தாவா?
என் சிரமத்தை புரிந்துக்கொண்ட கடைக்குட்டிக்கு நன்றி....
ரொம்பக் கஷடம் தான்... வயிற்றுப் பிழைப்பிற்காக இப்படி நம்மை!! வருத்த வேண்டியிருக்கிறது. என்ன செய்வது எல்லாம் Head எழுத்து.
Remba correct Mama, India vandudu..
பெண்கள் இல்லாத தேசத்தில் யாரும் குடியிருக்க வேண்டாம்..
கண்டிப்பா நான் குடியிருக்க மாட்டேன் :))))))))
தாங்கள் சொல்வது ரொம்ப சரி. பணத்திற்காக வந்து பிணத்துடன் வாழ வேன்டி இருக்கு அன்பரே. குடும்பத்தை அழைத்து வந்தாலும் இதேதான். சொர்க்கதில் இருக்கிற நரகம் இது. இங்கே பெண்கள் மட்டுமே issueவல்ல,..
வந்தோமா சம்பாரிச்சோமா கிளம்பினோமானு இருக்கனும்,.வேற வழி இல்ல,.. ஆன ஒன்னு சாரதி,.. இந் alternative fuel மட்டும் வந்தால் இந்த ஷேக்கு எல்லம் மறுபடியும் ஒட்டகம் மேய்க்க வேண்டியதுதான்,.. நடக்குமா????? It is billion doller question friend,..
ரொம்ப சரி...நான் இங்கு 'Das Island, Abu Dhabi' வேலை செய்து கொண்டிருக்கிறேன்...இங்கு மருந்துக்குக்கூட பெண்களே இல்லை...ஆனால் விடுமுறை 100 நாட்களுக்கு ஒருமுறை என்பதால் பரவாயில்லை....
உங்க நிலமை ரொம்ப மோசம் தான்....
//pappu said...
அந்த ஊரில கண்டிப்பா பர்தாவா?//
ஆமாம் ப(பா)ப்பு...
எல்லாமே கருப்பு தான்....
ஆங்கிலேயர்களுக்கு மட்டும் விதிவிலக்கு..
ஏன்னா அவனுங்க இல்லனா இவனுங்களுக்கு ஆயில் கிடைச்சிருக்காது....
வருகைக்கு நன்றி எட்வின்..
இந்த பதிவு இங்கே வரத்துடிக்கும் நண்பர்கள் அறிந்துக்கொள்ளவே!
//SUBBU said...
கண்டிப்பா நான் குடியிருக்க மாட்டேன் :))))))) //
பார்த்தீங்களா நண்பர் சுப்பு சொன்னதை....
//jothi said...
தாங்கள் சொல்வது ரொம்ப சரி. பணத்திற்காக வந்து பிணத்துடன் வாழ வேன்டி இருக்கு அன்பரே. குடும்பத்தை அழைத்து வந்தாலும் இதேதான். சொர்க்கதில் இருக்கிற நரகம் இது. இங்கே பெண்கள் மட்டுமே issueவல்ல,..
வந்தோமா சம்பாரிச்சோமா கிளம்பினோமானு இருக்கனும்,.வேற வழி இல்ல,.. ஆன ஒன்னு சாரதி,.. இந் alternative fuel மட்டும் வந்தால் இந்த ஷேக்கு எல்லம் மறுபடியும் ஒட்டகம் மேய்க்க வேண்டியதுதான்,.. நடக்குமா????? It is billion doller question friend,..//
உங்களோட காதல் கவிதை நல்லாயிருக்கு...
ஆமா எப்படி சமாளிக்கிறீங்க உங்க அம்மணியோட பிரிவை????
//பெண்கள் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்க வேண்டாம்..//
எல்லாம் போன ஜென்மத்துல அவிங்கவிங்க செய்யற பாவ புண்ணியம்.. நீங்க என்ன பாவத்த பண்ணுனீங்களோ.. அங்க போய் மாட்டிட்டள்....
dear sir,
I am also from saudi arabia. Even seeing the topic I know its our place. Not only young women, we dint have a chance to see any older women to remind us our mothers. And Kids also. I didnt have a chance to see small kids except some in parks. They too are violent.
"சாப்பிட்டியா சாரதி?" எனத் தொலைபேசி வழியாக
பரிவோடு கேட்கும் அந்த ஒற்றை பெண்குரல் தான்
என்னை இன்னும் உயிரோடும் உணர்வோடும் வைத்திருக்கிறது.
எனவே மக்களே!
பெண்கள் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்க வேண்டாம்..
தெரிஞ்சா சரி...
hm, ippavaadhu sila pathivu thalaippula , pennai vaaltharammadhri build up kuduthuttu pengalai kevalappaduththum pathivugalai podum medhavigal purindhu kondaal sari. illenna avanga unga oorukku kudi peyaralaame.
மிக அருமை தோழர் சாரதியே.....
Post a Comment