Monday, November 9, 2009

தோசை



கை நிறைய காசிருந்தும்

நாக்கு ருசிக்கலையே...

நம்ம ஊரு சாப்பாட்டை

தின்னு பல நாளாச்சு…

நானும் சமைக்குறேன்னு

உலைக்கு அரிசி போட்டு

வேகும்வரை காத்திருந்து

கையில் சூடுபட்டு

வேகாம இறக்கிவச்சி

வெங்காயம் வெட்டுறப்ப

அடிக்கடி வருது அம்மா ஞாபகம்!!

கண்ணீரும் கொட்டுது...

ஆசையா அம்மா செஞ்ச தோசையையும்

தங்கச்சி செஞ்ச சட்னியும்

சரியில்லைனு தட்டோடு தூக்கி எறிஞ்ச பாவம்...

சும்மாவா போகும்???


.

21 comments:

ஆயில்யன் said...

//ஆசையா அம்மா செஞ்ச தோசையையும்
தங்கச்சி செஞ்ச சட்னியும் சரியில்லைன்னு தட்டோடு தூக்கி எறிஞ்ச பாவம் சும்மாவா போகும்??//

உணர்ந்துவிட்டேன் !

sarathy said...

நானும் உணர்ந்திட்டேன் ஆயில்யன்
)))))))

ப்ரியமுடன் வசந்த் said...

//சரியில்லைனு தட்டோடு தூக்கி எறிஞ்ச பாவம்...

சும்மாவா போகும்??? //

கண்டிப்பா அந்த பாவம் விடாது சாரதி...

இப்படி அடிக்கடி எழுதுங்களேன்...

ஏன் பிரேக் எடுத்துகிறீங்க...

sarathy said...

கண்டிப்பா முயற்சி செய்கிறேன் வசந்த்...

வினோத் கெளதம் said...

சாரதி உண்மையில் உணர்ந்துக்கொண்டு தான் இருக்கிறோம்..
அருமையா இருக்கு..
வசந்த் சொல்ற மாதிரி அடிக்கடி எழுதுங்க..

நாகா said...

என்ன சாரதி, வேலைப்பளுவெல்லாம் குறைந்து விட்டதா? தொடர்ந்து எழுதுங்களேன், மனதிலுள்ள பாரங்கள் இறங்கியது போலிருக்கும்..

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நாள் லீவ் போட்டுவிட்டு கையில் தோசையோடு வந்திருக்கீங்க. வாங்க வாங்க

//ஆசையா அம்மா செஞ்ச தோசையையும்
தங்கச்சி செஞ்ச சட்னியும்
சரியில்லைனு தட்டோடு தூக்கி எறிஞ்ச பாவம்...
சும்மாவா போகும்??? //

சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க. நிரைய எழுதுங்க சாரதி நேரம் கிடைக்கும்போது

அப்துல்மாலிக் said...

ரொம்ப நாள் கழித்து சென்டிமெண்டோடு வந்து நச்சுனு நாலு வரியையும் சொல்லிட்டுப்போய்ருக்கீங்க‌

தோசை தட்டு மட்டுமா? இன்னும் நிறைய சொல்லலாம்

Unknown said...

//சரியில்லைனு தட்டோடு தூக்கி எறிஞ்ச பாவம்...

சும்மாவா போகும்??? //
anubavithuvitten...

sarathy said...

// வினோத்கெளதம் said...
சாரதி உண்மையில் உணர்ந்துக்கொண்டு தான் இருக்கிறோம்..
அருமையா இருக்கு..
வசந்த் சொல்ற மாதிரி அடிக்கடி எழுதுங்க.. //

எழுத முயற்சி பண்றேன் வினோத்.

sarathy said...

// நாகா said...
என்ன சாரதி, வேலைப்பளுவெல்லாம் குறைந்து விட்டதா? தொடர்ந்து எழுதுங்களேன், மனதிலுள்ள பாரங்கள் இறங்கியது போலிருக்கும்.. //

அன்பின் நாகா, நன்றி உங்களின் அக்கறைக்கு...

உங்களின் நட்சத்திர பதிவுகள் அனைத்தும் அருமை...
குறிப்பாக "கடலும் நுரையும்"...

sarathy said...

// S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நாள் லீவ் போட்டுவிட்டு கையில் தோசையோடு வந்திருக்கீங்க. வாங்க வாங்க
சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க. நிரைய எழுதுங்க சாரதி நேரம் கிடைக்கும்போது.. //

நன்றி நவாஸ்...

"யாளி"னு உங்க டைட்டில் பார்த்ததும் மலையாளிகள் பத்திதான் எழுதியிருப்பீங்க-னு நினைச்சேன்.

sarathy said...

// அபுஅஃப்ஸர் said...
ரொம்ப நாள் கழித்து சென்டிமெண்டோடு வந்து நச்சுனு நாலு வரியையும் சொல்லிட்டுப்போய்ருக்கீங்க‌

தோசை தட்டு மட்டுமா? இன்னும் நிறைய சொல்லலாம் //

ஆமா மாலிக்..
கடல் கடந்து தான் புத்தி வருது...

sarathy said...

// V said...

anubavithuvitten... //

வாங்க வீ...

Anonymous said...

ஆதங்கம் வெளிப்பட்டு இருக்கு சாரதி..பாவமின்னு சொல்லாதீங்க அந்த அம்மா தங்கைக்காக தானே இங்க தனியா நீங்க கஷ்டபடுறீங்க இஷ்டப்பட்டு....

sarathy said...

வாங்க தமிழரசி,

இஷ்டப்பட்டுதான் கஷ்டபடுறோம்..
இன்னும் 100 நாள் தானே...

பா.ராஜாராம் said...

இயல்பாய் ரொம்ப நல்ல இருக்கு சாரதி.நிறைய
எழுதுங்க.

sarathy said...

நன்றி திரு.ராஜா...
உங்களின் பின்னூட்டம் பார்த்து மிகவும் சந்தோசமாய் இருக்கிறது...

thiyaa said...

நல்ல சுவை

தமிழ் உதயம் said...

நிழலில் அருமை.. வெயிலில். அம்மாவின் அருமை... இம்மாதிரியான சூழலில்.

sarathy said...

நன்றி...
தியாவின் பேனா...

நன்றி தமிழுதயம்....

அடிக்கடி வாருங்கள்...

செய்தியோடை...