Wednesday, May 27, 2009

என்னைப்பற்றி நானே (அன்புச்) சங்கிலித் தொடரில்...


இது ஒரு (அன்புச்) சங்கிலித் தொடர்.

நிலாவும் அம்மாவும் தொடங்கி வைத்து,
கை நீட்ட அன்போடு கோர்த்துக்கொண்டவர்களின்
வரிசையில் நானும்.

என் கையை அன்போடு இழுத்து இணைத்தவர்
நண்பர் நவாஸ்.

இதுவரை இணைந்தவர்கள்:

ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
அபு அஃப்ஸர்
அ.மு. செய்யது
தமிழரசி
இராகவன் நைஜீரியா
காயத்ரி
நவாஸ்
பாலா

இதுல நானுமா???


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என் முழுப்பெயர் பார்த்தசாரதி. என் தந்தை சூட்டிய பெயர்.
அதனாலே என்னவோ எனக்கு மிக பிடிக்கும்.
பார்த்தா-அர்ச்சுனன்; சாரதி-தேரோட்டி.
பாரத போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய கிருஷ்ணாவின்
பெயரே பார்த்தசாரதி. கோகுலத்தின் கண்ணனை போன்று
என்னைச் சுற்றி No கோபியர்ஸ் Only அரேபியர்ஸ் மட்டும்.

மேலும் நான் ஹிந்து பத்திரிக்கைக்கு கடிதம் எழுதுபவனுமல்ல..


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பதினைந்து மாதத்திற்கு முன்னால், பெட்டியை தூக்கிகொண்டு
சௌதி கிளம்பும்போது அம்மா அழுததால்
என் கண்ணிலும் லேசா..


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஓஹோனு இல்லையென்றாலும் ஓரளவுக்கு பரவாயில்ல..
என் இடது பக்க மூளை சிறப்பா செயல்படுறதால
வலது கையால இதுவரைக்கும் ஏதும் எழுதினது இல்ல..
left hand writer,brusher,bowler, etc...
சாப்பிடுறதுக்கு மட்டும் கஷ்டபட்டு ரைட்டுல பழகிட்டேன்.


4. பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்யும் உருளை கிழங்கு வறுவலும்,
தக்காளி ரசமும்.

இப்போ அதெல்லாம் இல்ல.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட
நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் உள்ளத்து உணர்வின் படியே.
அவர்களின் அணுகுமுறையிலே
தான் இருக்கு என் முடிவு.
எனக்கு நண்பர்கள் அதிகம்...
எதையுமே எதிர்பார்க்காமல் ஓடிவந்து தோள்
கொடுக்கும் என் கல்லூரி கால நட்புகள் தான்
என்னை இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா, அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும். சுனாமிக்கு பிறகு வேளாங்கண்ணி
கடல் பொலிவிழந்து விட்டது. போன குளிர்காலத்தில்
நண்பர்களோடு சேர்ந்து நடுநடுங்க இராஸ்தனுரா
கடலில் கூட நீந்தினோம்.

எங்கள் வீட்டுக்கு முன்புறம் பெரிய
தாமரைக்குளம் ஒன்று உண்டு.
அதனை ஒட்டிய ஆலமரத்தின் கிளையொன்றிலிருந்து
தலைகுப்பற தண்ணீருக்குள் பாய்வதை இப்போது
நினைத்தாலும் முதுகுதண்டில் ஜிலிரென்றிருக்கிறது.
தரையில் இருந்த நாட்களை விட தண்ணிரில்
மிதந்த நாட்கள் தான் அதிகம்.
காவிரி பாயும் கடைக்கோடியிலிருக்கும்
திருத்துறைப்பூண்டி எனது சொந்த ஊர்..

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம் பார்த்துதான்.
அப்படியெல்லாம் முதல் பார்வையிலே
யாரையும் எடைபோடும் திறமை எனக்கில்லை.


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்:

எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு.
நம்மள மீறி என்ன நடந்திட போகுதுங்கிற தெனாவட்டுனு
கூட சொல்லலாம்.

பிடிக்காத விஷயம்:

தொப்பைய குறைக்க ஜிம்முக்கு போகலாம்னு
நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணியும்
இன்று வேண்டாம்,நாளைக்கு நிச்சயம் போகலாமென்ற
(நாசமாப் போன) என் நம்பிக்கைதான்.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஆசையாத்தான் இருக்கு.
ஆனா என்ன செய்ய.


10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் தங்கையோட குட்டி பையன் ஆதிஷ்,
பிறந்து ஒரு வயசாகியும் இன்னும் நேர்ல பார்க்கலை.
போட்டோஸ்ல மட்டும்தான்..
சீக்கிரம் போய் பார்க்கனும்.


11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை சர்ட், அதுக்கு மேட்சிங்க ஒரு பேண்ட்
கலர் சரியா சொல்லத் தெரியல.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

ISAIARUVI.COM-ல "ஒரு கல் ஒரு கண்ணாடினு" யுவன் பாடிட்டு இருக்கிறார்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீல நிறம்..

14. பிடித்த மணம்?

வேறென்ன என் திருமணம் தான்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

நட்புடன் ஜமால்: பின்னூட்ட புயல். இவரின் "இரவிலும் உதிக்கும் வானவில்"
படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு. இவர் பதிவில் உள்ள படங்களும் கவி பேசும்.
தரமான பின்னூட்டங்களின் சொந்தக்காரர். பெரும்பாலன பதிவர்களின்
பதிவை முதலில் சுவைப்பது இவர்தான்.

ஷர்வினா-வின் அப்பா: இவர பத்தி நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.
24 மணி நேரமும் இணையத்திலே இருப்பாரு.
ஒரு நாளைக்கு ஒரு பதிவு கூட போடலைனா மண்டையே
வெடிச்சிடும் இவருக்கு.
பல வம்பு வழக்குகளில wanted-அ ஆஜராவாரு.
நல்ல பல பதிவுகளை தருபவர்.

குறிப்பு:
மேற்கண்ட இருவரும் பிரபல பதிவர்கள் என்பதால்
இதை தொடர்வார்களா என்று சிறிய சந்தேகம்.

தொடர மறுத்தாலும் சரியானவர்களையே
அழைத்த மனத்திருப்தியே எனக்கு போதும்.


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

நவாஸ்:என்னை போலவே வளைகுடாவில்
வாடும் ஒரு ஜீவன். குறுகிய கால பழக்கமே
என்றாலும் இவர் என்னிடம் எடுத்துக்கொண்ட
உரிமை நெஞ்சை நெகிழச் செய்கிறது.
"இதுதான் gulf"-னு இவரேட பதிவுல,
எங்களோட வாழ்க்கை முறையை
ரத்தினச்சுருக்கமா சொல்லியிருக்காரு..
இன்னும் பல பதிவுகள் இவரை பற்றிய
மதிப்பை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது....
இதுவரைக்கும் பேசுனதில்ல..
நவாஸ் தொலைபேசி எண்ணை எனக்கு தருவீங்களா?


17. பிடித்த விளையாட்டு?

ஒருகாலத்துல கிரிக்கெட்,
இப்போ ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு.

18. கண்ணாடி அணிபவரா?

ம்ஹும்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கமல் படமெல்லாம் பிடிக்கும்.
இப்படித்தான்னு ஒரு வரைமுறை இல்லை.

20. கடைசியாகப் பார்த்த படம்?

"INSIDE" னு ஒரு FRENCH படம், குருரத்தின் உச்சக்கட்டம்..
தனியா யாரும் பார்க்காதீங்க...
பார்க்கனுமா???

21. பிடித்த பருவ காலம் எது?

டிசம்பரின் முடிவும், ஜனவரியின் ஆரம்பமும்..

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தற்போதைக்கு ஒன்னும் இல்ல.
கடலை மடிச்சு தந்த பேப்பரக்கூட ஒருவரி விடாம
வாசிச்சு வளர்ந்தவன்..
காலம் மாறிப்போச்சு.

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அரைமணிக்கொரு தடவை அதுவா மாறிக்கிட்டே இருக்கும்.
உபயம்: jhon's Background Switcher மென்பொருள்...

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்:
OFFSHORE PROJECT-ல இருக்குறதுனால தினமும்
ஒரு மணி நேரம் BOAT-ல பயணம்.
அந்த BOAT சத்தத்துல லைப் ஜாக்கெட்ட மாட்டிக்கிட்டு
தூங்குறது தனி சுகம்.

பிடிக்காத சத்தம்:
அந்த நேரத்திலயும் காதுக்குள்
கத்தும் பிலிப்பைனியர்கள்.
கொடுமை...

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சௌதி வந்தது தான் அதிகபட்சம்..

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரியலை. என் கூட படிச்ச பசங்கெல்லாம் என்னை
"நீ வாத்தியாரத்தான் ஆகப்போறனு" சொல்லுவாங்க...
அப்படி என்ன தனித்திறமையை கண்டானுங்களோ..

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அது வேணாம் விடுங்க..


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அலட்சியம், சோம்பல், இன்னும் நிறைய...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி தான். குடும்பத்தோடு போய் ஒருவாரம் ஆசைதீர தங்கிட்டு வரனும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் என்னால் முடிந்தளவு சந்தோசமாய்
வைத்துக்கொள்ளவே ஆசை.

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடி இருக்குமாம்
கொக்கு..
உறுமீன் வரட்டும், வந்ததும் சொல்கிறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை என்னங்க வாழ்க்கை.
"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்"

என்னைத்தொடர்ந்து நான் உரிமையோடு வம்புக்கு பிடித்து இழுக்கும் கைகள்

நட்புடன் ஜமால் மற்றும் சுரேஷ்.

73 comments:

அபுஅஃப்ஸர் said...

போட்டாச்சா

இருங்க உள்ளே போய் மேய்ந்துவிட்டு வாரேன்

அபுஅஃப்ஸர் said...

//வாழ்க்கை என்னங்க வாழ்க்கை.
"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்//

ரசித்தேன்

காலத்தின் கட்டாயம் அனுபவிப்பவனுக்கே வெளிச்சம்

அபுஅஃப்ஸர் said...

//என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் என்னால் முடிந்தளவு சந்தோசமாய்
வைத்துக்கொள்ளவே ஆசை.
/

நல்ல ஆசை, நாமும் அதன் மூலம் சந்தோஷமடையலாம்

அபுஅஃப்ஸர் said...

//வேறென்ன என் திருமணம் தான்//

ரொம்ப ஆசையா தான் இருக்கிரீர், விரைவில் இருமணங்கள் ஒருமணமாக வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

//ஆலமரத்தின் கிளையொன்றிலிருந்து
தலைகுப்பற தண்ணீருக்குள் பாய்வதை இப்போது
நினைத்தாலும் முதுகுதண்டில் ஜிலிரென்றிருக்கிறது.
தரையில் இருந்த நாட்களை விட தண்ணிரில்
மிதந்த நாட்கள் தான் அதிகம்.
//

அதே அதே அதே..


//காவிரி பாயும் கடைக்கோடியிலிருக்கும்
திருத்துறைப்பூண்டி எனது சொந்த ஊர்..
//

ரொம்ப நெருங்கி வந்துவிட்டீர்..

அபுஅஃப்ஸர் said...

//என் முழுப்பெயர் பார்த்தசாரதி//

நீங்க சாரதி யா இல்லை சார தீ யா

ஹா ஹா

அனைத்து எதார்த்தமான பதில்களையும் ரசித்தேன்..

உங்களின் மறுபக்கம் தெரிந்துக்கொண்டேன்

வாழ்த்துக்கள்

sarathy said...

// அபுஅஃப்ஸர் said...
/வாழ்க்கை என்னங்க வாழ்க்கை.
"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்/

ரசித்தேன்

காலத்தின் கட்டாயம் அனுபவிப்பவனுக்கே வெளிச்சம் //

அதுக்குள்ள இத்தனை பின்னூட்டமா??

நன்றி அபுஅஃப்ஸர் உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும்...

vinoth gowtham said...

சத்தியமா வாய் விட்டு சிரிச்சிட்டேன்..என்ன இங்கயும் அவனுங்க தொல்லை பெரிய தொல்லை..

sarathy said...

// vinoth gowtham said...
சத்தியமா வாய் விட்டு சிரிச்சிட்டேன்..என்ன இங்கயும் அவனுங்க தொல்லை பெரிய தொல்லை.. //

சில சமயம் நாலு சாத்து
சாத்தலாம்னு தோணும்...

நட்புடன் ஜமால் said...

தங்களை அறிய தந்தமைக்கு மிகவும் நன்றி

நம்மையும் மதித்து அழைத்துள்ளீர்கள் அதற்கும் நன்றி

நட்புடன் ஜமால் said...

\\எதையுமே எதிர்பார்க்காமல் ஓடிவந்து தோள்
கொடுக்கும் என் கல்லூரி கால நட்புகள் தான்
என்னை இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது\\

என் உணர்வுகளும் இப்படித்தான்

பள்ளி(க்)கால நட்பு

மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை

நட்புடன் ஜமால் said...

\\14. பிடித்த மணம்?

வேறென்ன என் திருமணம் தான்.\\

இதுவரை யாரும் சொல்லாத இரசிக்ககூடிய பதில்

நட்புடன் ஜமால் said...

\\பதிவர்களின்
பதிவை முதலில் சுவைப்பது இவர்தான்.\\


சில வாரங்களாக இது இயலவில்லை


நம்மையும் அழைத்துள்ளீர்கள், இன்று அவசியம் இந்திய நேரம் 3 மணிக்கு பாறுங்கோ

நட்புடன் ஜமால் said...

\\குறிப்பு:
மேற்கண்ட இருவரும் பிரபல பதிவர்கள் என்பதால்
இதை தொடர்வார்களா என்று சிறிய சந்தேகம்.\


y y y y y y - ba

நட்புடன் ஜமால் said...

\\கமல் படமெல்லாம் பிடிக்கும். \\

same blood

நட்புடன் ஜமால் said...

\\
30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் என்னால் முடிந்தளவு சந்தோசமாய்
வைத்துக்கொள்ளவே ஆசை.\\


ரொம்ப நல்ல ஆசை

நட்புடன் ஜமால் said...

\\"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்"\\


நீங்க வாத்தியாரேதான்

அருமையான பதில்

sakthi said...

மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை வாடி இருக்குமாம்
கொக்கு..
உறுமீன் வரட்டும், வந்ததும் சொல்கிறேன்.

HAHAHAHA

வந்ததும் கண்டிப்பா சொல்லனும்

sakthi said...

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரியலை. என் கூட படிச்ச பசங்கெல்லாம் என்னை
"நீ வாத்தியாரத்தான் ஆகப்போறனு" சொல்லுவாங்க...
அப்படி என்ன தனித்திறமையை கண்டானுங்களோ..


அடி பிச்சுடுவீங்களோ

sakthi said...

பிடித்த பருவ காலம் எது?

டிசம்பரின் முடிவும், ஜனவரியின் ஆரம்பமும்..


சேம் ப்ளட்

sakthi said...

என்னை போலவே வளைகுடாவில்
வாடும் ஒரு ஜீவன். குறுகிய கால பழக்கமே
என்றாலும் இவர் என்னிடம் எடுத்துக்கொண்ட
உரிமை நெஞ்சை நெகிழச் செய்கிறது.
"இதுதான் gulf"-னு இவரேட பதிவுல,
எங்களோட வாழ்க்கை முறையை
ரத்தினச்சுருக்கமா சொல்லியிருக்காரு..
இன்னும் பல பதிவுகள் இவரை பற்றிய
மதிப்பை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது....
இதுவரைக்கும் பேசுனதில்ல..
நவாஸ் தொலைபேசி எண்ணை எனக்கு தருவீங்களா?

கேட்டு பாருங்க

sakthi said...

மேற்கண்ட இருவரும் பிரபல பதிவர்கள் என்பதால்
இதை தொடர்வார்களா என்று சிறிய சந்தேகம்.

தொடர மறுத்தாலும் சரியானவர்களையே
அழைத்த மனத்திருப்தியே எனக்கு போதும்.


கண்டிப்பா அதுக்கு நான் பொறுப்பு

sakthi said...

தொப்பைய குறைக்க ஜிம்முக்கு போகலாம்னு
நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணியும்
இன்று வேண்டாம்,நாளைக்கு நிச்சயம் போகலாமென்ற
(நாசமாப் போன) என் நம்பிக்கைதான்.

ஹ ஹ ஹ

ரசித்தேன்

sakthi said...

ஓஹோனு இல்லையென்றாலும் ஓரளவுக்கு பரவாயில்ல..
என் இடது பக்க மூளை சிறப்பா செயல்படுறதால
வலது கையால இதுவரைக்கும் ஏதும் எழுதினது இல்ல..
left hand writer,brusher,bowler, etc...
சாப்பிடுறதுக்கு மட்டும் கஷ்டபட்டு ரைட்டுல பழகிட்டேன்.


குட்

S.A. நவாஸுதீன் said...

வந்துட்டேன் சாரதி. மன்னிக்கணும் இன்னைக்கு வியாழன் என்பதால் விடுமுறை மூடில் ஆபிஸ் வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.

S.A. நவாஸுதீன் said...

கோகுலத்தின் கண்ணனை போன்று
என்னைச் சுற்றி No கோபியர்ஸ் Only அரேபியர்ஸ் மட்டும்.

ஹா ஹா ஹா ஆரம்பமே அமர்க்களமா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

கடைசியாக அழுதது எப்பொழுது?

பதினைந்து மாதத்திற்கு முன்னால், பெட்டியை தூக்கிகொண்டு
சௌதி கிளம்பும்போது அம்மா அழுததால்
என் கண்ணிலும் லேசா..

வழி பிறக்க வலி சுமந்து. இதுதான் நம் வாழ்க்கை.

S.A. நவாஸுதீன் said...

உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஓஹோனு இல்லையென்றாலும் ஓரளவுக்கு பரவாயில்ல..
என் இடது பக்க மூளை சிறப்பா செயல்படுறதால
வலது கையால இதுவரைக்கும் ஏதும் எழுதினது இல்ல..
left hand writer,brusher,bowler, etc...
சாப்பிடுறதுக்கு மட்டும் கஷ்டபட்டு ரைட்டுல பழகிட்டேன்

இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு கணிதத்தில் அறிவு கூடுதல் இருக்கும் என்பார்கள். சரிதான் (பொறியாளர்) சாரதி.

S.A. நவாஸுதீன் said...

பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்யும் உருளை கிழங்கு வறுவலும்,
தக்காளி ரசமும்.

இப்போ அதெல்லாம் இல்ல.

தம்மாம் தஞ்சை ரெஸ்டாரன்ட்டில் இதெல்லாம் எங்க கிடைக்கப் போவுது சாரதி. ஹ்ம்ம் அம்மா கையால் எது கிடைத்தாலும் அமிர்தம்தான்.

S.A. நவாஸுதீன் said...

நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட
நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் உள்ளத்து உணர்வின் படியே.
அவர்களின் அணுகுமுறையிலே
தான் இருக்கு என் முடிவு.
எனக்கு நண்பர்கள் அதிகம்...
எதையுமே எதிர்பார்க்காமல் ஓடிவந்து தோள்
கொடுக்கும் என் கல்லூரி கால நட்புகள் தான்
என்னை இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது.

எனக்கும் இன்றுவரை பள்ளி, கல்லூரி நண்பர்கள்தான். அதில் இப்பொழுது வலையுலக நண்பர்களில் சிலரும் இணைந்து இருக்கின்றார்கள்.

S.A. நவாஸுதீன் said...

6. குளத்தில் குட்டிகரணம் அடித்து குளிப்பது ஒரு சுகம்தான்.

7. ரசிக்கும்படியான பதில்

8. அங்கேயும் அதே கதைதானா! ஹா ஹா ரசித்தேன்

14. சூப்பர்

15. நட்புடன் ஜமாலைப்பற்றி மிகச் சரியா சொன்னீங்க சாரதி. பதிவுகளை முதலில் சுவைப்பது மட்டுமல்ல நண்பர்களுக்கு பகிர்ந்தளிப்பதிலும் ஜமாலை மிஞ்ச ஆளில்லை. எனக்கு பெரும்பாலும் கிடைத்த இணைய தல நண்பர்களுக்கு காரணம் ஜமாலும் "என் உயிரே" அபஃஸரும்தான்.

சுரேஷ்: எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு நண்பன். தன்னைக் காட்டிலும் தன் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனம் படைத்தவன். சொல்வதை திருத்தமாக, தைரியமாக சொல்வதில் சக்கரை சக்கரைதான். எல்லோருக்கும் பிடித்த பதிவாளர்.

ரெண்டு பெரும் சீக்கிரம் வாங்க மக்களா.

S.A. நவாஸுதீன் said...

16. என்னோட மொபைல் நம்பர்: 0504672540

19. கமலின் பரமவிசிறி நானும்.

22. சூப்பர். ரசித்தேன்

24. ஹா.ஹா ஹா எங்க போனாலும் இந்த பூனைங்க தொல்லை தாங்க முடியலைல சாரதி.

31. ரசிக்கும்படியான பதில் சாரதி. நல்லவேளை தனி கேபின் என்பதால் நான் சிரிப்பதை யாரும் பார்க்கவில்லை.

இதைவிட இரத்தினச்சுருக்கமாய் மிக அழகாக, மிகதெளிவாக வேறு யாரால் சொல்லமுடியும். ஆகா. சாரதி நீங்க "வாத்தியாராத் தான் போவீங்கன்னு" உங்க நண்பர்கள் கணித்தது மிகச்சரியே. காலத்தின் கட்டாயம் கப்சா ரைஸ், சர்க்கஸ் கோழியுமான வாழ்க்கை. சாரதி நேர்ல பேசிக்கிட்டமாதிரி ஒரு பீலிங். விரைந்து தொடர்பு கொள்ளவும்.

S.A. நவாஸுதீன் said...

32. இதைவிட இரத்தினச்சுருக்கமாய் மிக அழகாக, மிகதெளிவாக வேறு யாரால் சொல்லமுடியும். ஆகா. சாரதி நீங்க "வாத்தியாராத் தான் போவீங்கன்னு" உங்க நண்பர்கள் கணித்தது மிகச்சரியே. காலத்தின் கட்டாயம் கப்சா ரைஸ், சர்க்கஸ் கோழியுமான வாழ்க்கை. சாரதி நேர்ல பேசிக்கிட்டமாதிரி ஒரு பீலிங். விரைந்து தொடர்பு கொள்ளவும்.

Suresh said...

நன்றி நண்பா :-)

என்னையும் மதித்து அழைத்தற்க்கு நன்றி

படித்துவிட்டு வ்ருகிறேன்

Suresh said...

அட பாவி

//ஷர்வினா-வின் அப்பா: இவர பத்தி நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.
24 மணி நேரமும் இணையத்திலே இருப்பாரு.
ஒரு நாளைக்கு ஒரு பதிவு கூட போடலைனா மண்டையே
வெடிச்சிடும் இவருக்கு.
பல வம்பு வழக்குகளில wanted-அ ஆஜராவாரு.
நல்ல பல பதிவுகளை தருபவர்.//

யாரு டானு ஒரு நிமிடம் யோசிக்க வைத்துவிட்டாய் ... சர்வினா :-) sarwina

சரி மச்சானோடு என்னை அழைத்ததில் ரொம்ப சந்தோசம்

கிளம்பிடாங்கயா கிளம்பிட்டாங்க

Suresh said...

/நட்புடன் ஜமாலைப்பற்றி மிகச் சரியா சொன்னீங்க சாரதி. பதிவுகளை முதலில் சுவைப்பது மட்டுமல்ல நண்பர்களுக்கு பகிர்ந்தளிப்பதிலும் ஜமாலை மிஞ்ச ஆளில்லை. எனக்கு பெரும்பாலும் கிடைத்த இணைய தல நண்பர்களுக்கு காரணம் ஜமாலும் "என் உயிரே" அபஃஸரும்தான்.//

மிக சரியாக சொன்னார் நவாஸீதீன்

மச்சான்ஸ் கூட மனைவி வந்ததுக்கு அப்புறம் பேச முடியவில்லைனு வருத்தம் இருக்கு,

Suresh said...

@ நவாஸீதீன்

//சுரேஷ்: எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு நண்பன். தன்னைக் காட்டிலும் தன் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனம் படைத்தவன். சொல்வதை திருத்தமாக, தைரியமாக சொல்வதில் சக்கரை சக்கரைதான். எல்லோருக்கும் பிடித்த பதிவாளர்.//

ரொம்ப சொல்லிடாரு பா நண்பர் அவ்வளவு தகுதி எல்லாம் நமக்கு இல்லை

Suresh said...

//என் முழுப்பெயர் பார்த்தசாரதி//

அது பார்த்தாலே தெரியுது ஹீ ஹீ கவுண்டமணி காமெடி தான் ஞியாபகம் வருது

Suresh said...

பிடிச்ச விஷயம்:

//எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு.
நம்மள மீறி என்ன நடந்திட போகுதுங்கிற தெனாவட்டுனு
கூட சொல்லலாம்.//

ஹீ ஹீ நல்ல விஷியம் தான்

பிடிக்காத விஷயம்:

//தொப்பைய குறைக்க ஜிம்முக்கு போகலாம்னு
நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணியும்
இன்று வேண்டாம்,நாளைக்கு நிச்சயம் போகலாமென்ற
(நாசமாப் போன) என் நம்பிக்கைதான்.//

உங்களுக்கு மட்டுமா நிறையா பேருக்கு இந்த நம்பிக்கை இருக்கு ஹீ ஹீ

Suresh said...

//14. பிடித்த மணம்?

வேறென்ன என் திருமணம் தான்.//

ஹா ஹா அகிடுச்சா இல்லை இனிமே தானா

Suresh said...

//24 மணி நேரமும் இணையத்திலே இருப்பாரு.//

மணைவி இல்லாதனால நிறையா பதிவு போட்டேன்.. இப்போ வந்துடாங்க அதான் குறைந்து விட்டது...

Suresh said...

//நல்ல பல பதிவுகளை தருபவர்.//

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே

Suresh said...

//பெரும்பாலன பதிவர்களின்
பதிவை முதலில் சுவைப்பது இவர்தான்.//

மச்சான் பத்தி சொல்ல நிறையா இருக்கு நல்லவர் வல்லவர்

Suresh said...

//மேற்கண்ட இருவரும் பிரபல பதிவர்கள் என்பதால்
இதை தொடர்வார்களா என்று சிறிய சந்தேகம்.//

டேய் கொஞ்சம் ஓவரா இல்லை, மச்சானும் நானும் கண்டிப்பா தொடருவோம்..

Suresh said...

//நவாஸ்:என்னை போலவே வளைகுடாவில்
வாடும் ஒரு ஜீவன். குறுகிய கால பழக்கமே
என்றாலும் இவர் என்னிடம் எடுத்துக்கொண்ட
உரிமை நெஞ்சை நெகிழச் செய்கிறது.
"இதுதான் gulf"-னு இவரேட பதிவுல,
எங்களோட வாழ்க்கை முறையை
ரத்தினச்சுருக்கமா சொல்லியிருக்காரு..
இன்னும் பல பதிவுகள் இவரை பற்றிய
மதிப்பை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது....
இதுவரைக்கும் பேசுனதில்ல..
நவாஸ் தொலைபேசி எண்ணை எனக்கு தருவீங்களா?//

எனக்கும் மிகவும் நெஞ்சை தொட்ட நபர் ரொம்ப சந்தோசம் மச்சான்

Suresh said...

//"INSIDE" னு ஒரு FRENCH படம், குருரத்தின் உச்சக்கட்டம்..
தனியா யாரும் பார்க்காதீங்க...
பார்க்கனுமா???//

இங்கிலிஷ் பிரன்ஞ்னு கல்க்குறியே

Suresh said...

//"INSIDE" னு ஒரு FRENCH படம், குருரத்தின் உச்சக்கட்டம்..
தனியா யாரும் பார்க்காதீங்க...
பார்க்கனுமா???//

இங்கிலிஷ் பிரன்ஞ்னு கல்க்குறியே

Suresh said...

//அந்த BOAT சத்தத்துல லைப் ஜாக்கெட்ட மாட்டிக்கிட்டு
தூங்குறது தனி சுகம். //

டேய் வேலைய பாருனா ரசிக்காம தூங்குற அதுல கீழே விழுந்தா காப்பாத்த ஜாக்கெட்டு

சரி என்ஞ்சாய்

Suresh said...

//பிலிப்பைனியர்கள். //

உன்னை ரொம்ப தான் படுத்துராங்க

Suresh said...

//அது வேணாம் விடுங்க..//

இல்லை வேணும்

Suresh said...

இன்னும் பேச்சுலரா ஹீ ஹீ

Suresh said...

வாழ்க்கையை பத்தி அருமையா சொல்லி இருக்கே

//என்னைத்தொடர்ந்து நான் உரிமையோடு வம்புக்கு பிடித்து இழுக்கும் கைகள்

நட்புடன் ஜமால் மற்றும் சுரேஷ். //

உனக்கு இல்லாத உரிமையா

sarathy said...

ஷர்வினா பேர பதிவேற்றியதால் கோபப்படுவீர்களோ என்று நினைத்தேன்....

sarathy said...

நன்றி ஜமால்..

sarathy said...

வாங்க சக்தி, முதல் வருகையால்
மகிழ்ச்சி.

sarathy said...

// sakthi said...

HAHAHAHA

வந்ததும் கண்டிப்பா சொல்லனும் //

விரைவில்..

sarathy said...

// sakthi said...

/மேற்கண்ட இருவரும் பிரபல பதிவர்கள் என்பதால்
இதை தொடர்வார்களா என்று சிறிய சந்தேகம்./


கண்டிப்பா அதுக்கு நான் பொறுப்பு //

பொறுப்பை நிறைவேற்றிவிட்டீர்கள்.

ஒருவர் மின்னல் வேகத்தில் போட்டாச்சு.

மற்றவர் தட்டச்சிக்கொண்டிருக்கிறார்.

sarathy said...

// S.A. நவாஸுதீன் said...
வந்துட்டேன் சாரதி. மன்னிக்கணும் இன்னைக்கு வியாழன் என்பதால் விடுமுறை மூடில் ஆபிஸ் வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. //

ஒரு நாளுதான் லீவு, அதையும் கெடுத்திட்டேன் போல...

sarathy said...

S.A. நவாஸுதீன் said...
இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு கணிதத்தில் அறிவு கூடுதல் இருக்கும் என்பார்கள். சரிதான் (பொறியாளர்) சாரதி.

என்னமோ போங்க..
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுல
கணக்கு ல 100 க்கு 100 வாங்குனவன்தான் நான்..


ஆனால் கல்லூரிக்கு வந்தப்புறம்
கணக்கு ல வெறும் 3 மார்க்
வாங்கி அரியர்
வச்சேன்..

எல்லாம் மீசை வைச்ச திமிரு...

மறுபடியும் பழைய ஃபார்முக்கு
வந்ததெல்லாம் வரலாறு..

நவாஸ் நல்லாத்தான் கணிக்கிறீங்க.

Suresh said...

//sarathy

ஷர்வினா பேர பதிவேற்றியதால் கோபப்படுவீர்களோ என்று நினைத்தேன்....
//

நீங்க தப்பா எதும் சொல்லவில்லையே :-) எதுக்கு கோபப்படனும் நன்பா

நம்ம ஜாலி பட்டாசு ;)

கீழை ராஸா said...

தங்கள் பதிவில் நான் படிக்கும் முதல் பதிவே அறிமுகப்பதிவாகியதில் மகிழ்ச்சி...இனி அடிக்கடி வருகிறேன்

ursarathy said...

// கீழை ராஸா said...
தங்கள் பதிவில் நான் படிக்கும் முதல் பதிவே அறிமுகப்பதிவாகியதில் மகிழ்ச்சி...இனி அடிக்கடி வருகிறேன். //

உங்கள் வருகைக்கு நன்றி..
வரவேற்கிறேன்..

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல நகைச் சுவையும், உண்மையும், பாசமும் தெள்ளதெளிவாக தெரிகின்றது உங்கள் கேள்வி பதிலில் .... வாழ்த்துக்கள்

sarathy said...

// அது ஒரு கனாக் காலம் said...
நல்ல நகைச் சுவையும், உண்மையும், பாசமும் தெள்ளதெளிவாக தெரிகின்றது உங்கள் கேள்வி பதிலில் .... வாழ்த்துக்கள் //

வாங்க சுந்தர ராமன்..
நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு...

வியா (Viyaa) said...

உங்களின் பக்கதிற்கு வருவது முதல் முறை..
எனது வலைபதிவுக்கு வருகை புரிந்ததிற்கு நன்றி சாரதி

வியா (Viyaa) said...

வாழ்க்கை என்னங்க வாழ்க்கை.
"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்"

nice..

sarathy said...

நன்றி வியா.

முனைவர் சே.கல்பனா said...

வணக்கம் சாரதி உங்களைப் பற்றி அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் திருத்துறைப்பூண்டியா?நான் மன்னையில்தான் பள்ளி பருவம் முடித்தேன்.என் ஊர் ஒக்கநாடு கீழையூர் அந்தப் பகுதியைச் சார்ந்தது தான்.

நவநீதன் said...

//மேலும் நான் ஹிந்து பத்திரிக்கைக்கு கடிதம் எழுதுபவனுமல்ல..//

ஏன்னா? நெத்தியில கோடாவது போட்டிருப்பேளா?

கல்கி said...

//"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்"//

Excellent words Sarathy!!!

தமிழரசி said...

1சாரதியாய் இரு ஆனால் குருஷேத்திரத்துக்கு வேண்டாம்..
no கோபியர்ஸ் பாவம்.....
2.கருமி கொஞ்சம் நல்லாத் தான் அழறது..
4. நல்லவேளை சின்ன மெனு தான் நம்ம அபு மாதிரியில்லை
5.அதனால் தான் அதுக்கு பேரு நட்பு
6.பூர்வ ஜென்மத்தில் மீன் இனமோ....
8. நல்ல எதார்த்தம்..எல்லாரையும் போல சோம்பேறித்தனம்
14. சரி சரி வீட்டில் பேசறோம்...
16.பேசினா அவர் பிறந்த நாளையும் கேட்டுச் சொல்பா..விரும்பினா உங்க பிறந்த நாளும்.....
25. தாங்களும் பாலைவனப் பறவையா?
26. நல்லவேளை நிறைய பேரின் எதிர்க்காலம் காப்பாற்றப்பட்டது....
30. நல்ல ஆசை
31.உறு மீன் வந்தப்புறம் எங்கப்பா பேச போறீங்க....
32.வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

sarathy said...

// கல்கி said...
//"ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்றிரண்டு நிஜங்களும்"//

Excellent words Sarathy!!! //

நன்றி கல்கி...

sarathy said...

// தமிழரசி said...

2.கருமி கொஞ்சம் நல்லாத் தான் அழறது.

நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்?

6.பூர்வ ஜென்மத்தில் மீன் இனமோ....

யாருக்கு தெரியும்?

26. நல்லவேளை நிறைய பேரின் எதிர்க்காலம் காப்பாற்றப்பட்டது....

என்மேல இவ்ளோ நன்நம்பிக்கையா?

16.பேசினா அவர் பிறந்த நாளையும் கேட்டுச் சொல்பா..விரும்பினா உங்க பிறந்த நாளும்.....

நீங்க என்னை விட ஏழு நாள் மூத்தவங்க.

நவாஸ்- சீக்கிரமா சொல்வாரு.

செய்தியோடை...