Thursday, June 18, 2009

தாவணியில் வந்த ஒரு நந்தவனமா?


கடந்த இரண்டு வாரங்களில்
மனசுக்குள்ள பல கவலைகள் இருந்தாலும்
அதையெல்லாம் தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டு
நம்ம கூடப் படிச்ச பயலுக்கு கல்யாணம்
நடக்கப் போறத நினைச்சா
ரொம்ப சந்தோசமா இருக்கு.

இராமச்சந்திரன்.

எங்க செட்டு பசங்களிலே இவன்தான்
முதலில் கல்யாணம் பண்ணப்போறான்.

நாங்கெல்லாம்
கல்லூரியில் சேரும் போது
Electronic circuits-ல
ஒரு மண்ணும் தெரியாது.

Bread board-லாம் என்னவென்று
எங்களுக்கு மூன்றாம் செமஸ்டர்
circuit lab பண்றப்ப தான் தெரியும்.
அதுவரைக்கும் நாங்க அது ஏதோ
பேக்கிரி ஐட்டம்னு நினைச்சிட்டு
இருந்தோம்.

ஆனா இவன் மட்டும் திருச்சி SIT ல
Diplamo in Instrumentation
முடிச்சிட்டு வந்த திமிர்ல
எல்லாமே தெரியும்னு
தெனாவட்டா உட்கார்ந்திருப்பான்.

சிலசமயம் எங்க வாத்தியாருக்கே
எதாவது சந்தேகம் வந்தா
இவன்தான் தீர்த்து வைப்பான்.

ஆளு வளரலைன்னாலும்
அறிவு வளர்ச்சி கொஞ்சம் ஜாஸ்தி.

நான் சௌதி வந்து சரியா ஆறு மாதம்
கழித்து அவனும் இங்க
வந்துட்டான்.
எனக்கும் அவனுக்கும் வெறும்
150 கி.மி தூரம் தான் இடைவெளி.

அவன் இங்க இருந்த ஒரு வருடக்காலமும்
சௌதியின் பல பகுதிகளுக்கு பறந்துட்டே
இருப்பான். ஏன்னா அவனோட வேலை அப்படி.
யான்பு, ஜித்தாஹ்,சொய்ஃபா,
ரியாத், கடைசியா அல்-ஜூபைல்.


விடிஞ்சா அவனுக்கு கல்யாணம்.

பொண்ணு போட்டோ-வ மெயில்
பண்ணச் சொன்னா, இதோ அனுப்புறேன்னு
சொல்லிட்டு கடைசிவரை
கண்ணுல காட்டவே இல்லை.

விடுவோமா நாங்க???

இரண்டு வாரங்களுக்கு முன்பு அவனை
வழியனுப்ப ஜுபைல் போயிருந்தேன்.

என் கல்லூரி நண்பர்கள்
ஆணந்த், ரஹிம், அஸ்பாக்
போன்றோரை சந்திக்கும்
வாய்ப்பும் கிட்டியது.

அவன் கொஞ்சம் அசந்த நேரமா
பார்த்து அவனோட லேப்டாப்-ஐ
பிரிச்சு மேஞ்சி தேடு-தேடுன்னு தேடி
ஒருவழியா C: -ல
ஒளிச்சு வச்சிருந்த பெண்ணோட
போட்டோ-வ பார்த்த எங்களுக்கு
பயங்கர ஷாக்!!!

பொண்ணு
ஸ்கூல் பிள்ளை மாதிரி இருக்கு.

அப்புறந்தான் சொல்றான்.
அது அந்த பொண்ணு பத்தாம் வகுப்பு
படிக்கும் போது எடுத்ததாம்.

இந்த போட்டோ-வ மட்டும் பார்த்துட்டு
ஓகே சொல்லிட்டியா?
அவன் பதில் சொல்லவே இல்லை.

பாவம் அவன் என்ன பண்ணுவான்?

முன்னெல்லாம் வகைவகையா
பார்த்ததால GOOD, BETTER, BEST-னு
தேடிட்டு இருப்போம்.

இப்போதெல்லாம் நம்ம ஊரு பொண்ணுங்க
யாரைப்பார்த்தாலும் அழகாத்தான் தெரியுறாங்க.

சமைக்கத் தெரியுமா டா?
அதற்கும் அவனிடம் பதில் இல்லை.

நமக்கும் இதே கதி தானா?

என் வாழ்க்கை துணையைப் பற்றி
பெரிதாக எதிர்பார்ப்பு இருந்தாலும்
சமையலை பொறுத்தவரை
மிக மெல்லிசாக தோசை சுடுவதற்கும்,
நல்ல சுவையான "டீ" போடத் தெரிந்திருந்தாலே
போதும்.
கண்டேன் என் சீதையை.

பொண்ணு அவனுக்கு நல்லா
பொருத்தமான ஜோடியா தான் இருந்திச்சு.
மாப்பிள்ளை இப்போ இந்தியா போயிட்டாரு.

சௌதி மாப்பிள்ளை கிடைக்க அந்த பெண்
மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

(எதிர்காலத்தில் எனக்கும் உதவும் என்பதால்
இக்கருத்தினை இங்கு பதிவு செய்ய
வேண்டிய நிர்பந்தம்)

இல்லையா பின்னே?

குடும்பத்தோட வண்டி கட்டிக்கிட்டு
பெண் பார்க்க போறோம்னு போய்
பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு
பொண்ணுக்கு ஆடத் தெரியுமா?
தண்ணிக்குடம் தூக்கத் தெரியுமா? -னு
ஆயிரம் கேள்வி கேட்டு
குடைந்தெடுத்துவிட்டு கடைசியா
வீட்டுக்கு போயி யோசிச்சு பதில்
சொல்றோம்னு Infosys Company
HRD Manager மாதிரி லந்து
பண்ற இந்த காலத்துல,

மெயிலில் வந்த ஒரே ஒரு
போட்டோவை மாத்திரம் பார்த்து
(அதுவும் பத்தாம் வகுப்பு போட்டோ)
ஒகே சொல்லி ஊர் போய்
இறங்கி அடுத்த இருபதாம் நாள் திருமணம்.

வாழ்த்துகள்-டா மச்சான்.

மணமக்கள் இருவரும்
வாழ்வின் எல்லா வளமும் நலமும்
பெற்று பல்லாண்டு வாழ இறைவனை
வேண்டுகிறேன்.


மணமக்கள்:
இராமச்சந்திரன்.
பரமேஸ்வரி.


மணநாள்:
19/JUNE/2009

இடம்:
சூசையப்பர் திருமண மண்டபம்.
இலால்குடி.
திருச்சி.

எல்லாரும் வந்து வாழ்த்திட்டு போங்க...

15 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

இராமச்சந்திரன்+பரமேஸ்வரி

sarathy said...

நன்றி.. நண்பர் ஜமால்...

sakthi said...

வாழ்த்துக்கள் உங்கள் நண்பர்க்கு

எல்லா வளமோடும் நலமோடும் நீடுழி வாழ ஆண்டவனை பிரார்திக்கிறேன்....

வாழ்க வளமுடன்!!!

S.A. நவாஸுதீன் said...

கடந்த இரண்டு வாரங்களில்
மனசுக்குள்ள பல கவலைகள் இருந்தாலும்
அதையெல்லாம் தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டு
நம்ம கூடப் படிச்ச பயலுக்கு கல்யாணம்
நடக்கப் போறத நினைச்சா
ரொம்ப சந்தோசமா இருக்கு.

கவலைப்பட வேண்டாம் சாரதி. நல்லதே நடக்கும்.

S.A. நவாஸுதீன் said...

என் வாழ்க்கை துணையைப் பற்றி
பெரிதாக எதிர்பார்ப்பு இருந்தாலும்
சமையலை பொறுத்தவரை
மிக மெல்லிசாக தோசை சுடுவதற்கும்,
நல்ல சுவையான "டீ" போடத் தெரிந்திருந்தாலே
போதும்.
கண்டேன் என் சீதையை.

லஞ்ச் டின்னெர் எல்லாம் நீங்க பண்றதா பிளான்?

S.A. நவாஸுதீன் said...

சௌதி மாப்பிள்ளை கிடைக்க அந்த பெண்
மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

(எதிர்காலத்தில் எனக்கும் உதவும் என்பதால்
இக்கருத்தினை இங்கு பதிவு செய்ய
வேண்டிய நிர்பந்தம்)

இல்லையா பின்னே?

இதான் சாரதி டச். சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

கடைசியா வீட்டுக்கு போயி யோசிச்சு பதில் சொல்றோம்னு Infosys Company
HRD Manager மாதிரி லந்து
பண்ற இந்த காலத்துல,

கல்யாணத்துக்கு முன்னாடி தானே இந்த ரவுசெல்லாம் காட்டமுடியும்

S.A. நவாஸுதீன் said...

மணமக்கள்:
இராமச்சந்திரன்.
பரமேஸ்வரி.

மணமக்கள் வாழ்வின் எல்லா நலமும் வளமும் பெற்று சின்ன சின்ன செல்லச் சண்டைகளோடு சந்தோசமாக வாழ மனமார வாழ்த்துகிறேன்.

S.A. நவாஸுதீன் said...

நண்பருக்காக ஒரு வாழ்த்துப்பதிவிட்ட சாரதியும் சீக்கிரம் மாட்டிக்கொள்ள சாரி மணமுடிக்க வாழ்த்துவோம்.

"உழவன்" "Uzhavan" said...

என் பிறந்த நாளூம் அவரின் திருமண நாளும் இனி ஒரே நாளாக இருக்கப்போகிறது. :-) இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்
உழவன்

sarathy said...

// சக்தி
S.A. நவாஸுதீன்
உழவன் //

மணமக்களை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றி.

ஒரு நாள் முன்னதாகவே
உழவருக்கு என் உள்ளங்களிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

Suresh said...

வாழ்த்துகள் மச்சான், நம்ம ஊருல கல்யாணம் வாழ்த்துகள் :-) ரொம்ப சந்தோசம்

Suresh said...

//மெயிலில் வந்த ஒரே ஒரு
போட்டோவை மாத்திரம் பார்த்து
(அதுவும் பத்தாம் வகுப்பு போட்டோ)
ஒகே சொல்லி ஊர் போய்
இறங்கி அடுத்த இருபதாம் நாள் திருமணம்//

அவரு ரொம்ப நல்லவர் :-)

Suresh said...

தமிழர்ஸில் இருந்து வந்தேன் படிச்சிட்டு வோட்டும் போட்டாச்சு

மந்திரன் said...

எனக்கும் உங்களை மாதிரியே சில பயங்கள் உள்ளன ..
என்ன பண்ணுவது ?
நான் இப்ப சமைக்க கத்துகிட்டேன்

செய்தியோடை...