உன் அடர்கூந்தலில்
முகம்புதைத்து அழுதழுதே
அழுக்காகி போகிறது...
நான் விண்ணேறுகையில்
என்னோடு வந்த உன் புகைப்படம்.
நீயில்லாத இந்நெடுந்தொலைவில்
உன்னை நினையாத நிமிடங்கள்
ஏதுமில்லை என்னிடம்.
ஓடும் பேருந்தில்,
நமக்கான இறுதி சந்திப்பில்,
உன்கை பிடித்து
உயிர் வலிக்க விடைபெற்று
ஓய்ந்துபோன அந்த
கணப்பொழுதின் உஷ்ணத்தை தவிர...
இவன்,
உன் கூந்தலில் தொலைந்துபோன...
நன்றி விகடன்
.
24 comments:
ஆகா.. இவ்வளவு நாள் உங்கள பாக்காம போயிட்டனே?
அருமை தோழா! நடத்து்ங்கள்!!
ஒரு பிரிவின் வலி
அருமை தோழா
//கணப்பொழுதின் உஷ்ணத்தை தவிர...
//
இதுக்காகவே எங்கும் ஒவ்வொருவருக்கும் இது சமர்பணம்
நல்லாயிருக்கு சாரதி
//அழுக்காகி போகிறது...
நான் விண்ணேறுகையில்
என்னோடு வந்த உன் புகைப்படம்.
//
அழுகையால் அழுக்காகும் இந்த வரிகள் ரொம்ப புடிச்சிருக்கு
மிக அருமையான வார்த்தைகளை வடித்து எடுத்து இருக்கிறாய் நண்பா
உன் அடர்கூந்தலில்
முகம்புதைத்து அழுதழுதே
அழுக்காகி போகிறது...
நான் விண்ணேறுகையில்
என்னோடு வந்த உன் புகைப்படம்.
சாரதி
சொல்ல வார்த்தையில்லை
அருமைங்க...
ஓடும் பேருந்தில்,
நமக்கான இறுதி சந்திப்பில்,
உன்கை பிடித்து
உயிர் வலிக்க விடைபெற்று
ஓய்ந்துபோன அந்த
கணப்பொழுதின் உஷ்ணத்தை தவிர...
மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள் சாரதியாரே...
அற்புதம் சாரதி ...
துவக்கத்தில்
அந்த கருப்பாகி போன கூந்தல் முதல்
ஞாபகத்தை இழந்ததாக கூறப்படும் உஷ்ணம் வரை
அருமை ...
//நீயில்லாத இந்நெடுந்தொலைவில்
உன்னை நினையாத நிமிடங்கள்
ஏதுமில்லை என்னிடம்.//
அசத்திட்டிங்க.... ]
நம்ம பக்கமும் வந்து பாருங்க......
பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க......
சாரதி அழகான அருமையான கவிதை..
ரசிகும்ப்படி எழுதி இருக்கீங்க..
உன் அடர்கூந்தலில்
முகம்புதைத்து அழுதழுதே
அழுக்காகி போகிறது...
நான் விண்ணேறுகையில்
என்னோடு வந்த உன் புகைப்படம்.
வாவ்வ். ரொம்ப நல்லா இருக்கு.
நீயில்லாத இந்நெடுந்தொலைவில்
உன்னை நினையாத நிமிடங்கள்
ஏதுமில்லை என்னிடம்.
நமக்கு நினைவுகள் மட்டுமே நிஜம்.
ஓடும் பேருந்தில்,
நமக்கான இறுதி சந்திப்பில்,
உன்கை பிடித்து
உயிர் வலிக்க விடைபெற்று
ஓய்ந்துபோன அந்த
கணப்பொழுதின் உஷ்ணத்தை தவிர...
சூப்பர். அந்த உஷ்ணம்தான் இங்கு உயிர் வாழ வைக்கிறது. இல்லையேல் Freeze ஆகி இருப்போம்
// கலையரசன் said...
ஆகா.. இவ்வளவு நாள் உங்கள பாக்காம போயிட்டனே?
அருமை தோழா! நடத்து்ங்கள்!! //
நன்றி கலையரசன்.
நானும் பார்க்கிறேன்...
// அபுஅஃப்ஸர் said...
நல்லாயிருக்கு சாரதி
ஒரு பிரிவின் வலி
அருமை தோழா
இதுக்காகவே எங்கும் ஒவ்வொருவருக்கும் இது சமர்பணம்
அழுகையால் அழுக்காகும் இந்த வரிகள் ரொம்ப புடிச்சிருக்கு //
நன்றி அபு..
நினைப்பில் தானே நித்தமும்...
// Suresh said...
மிக அருமையான வார்த்தைகளை வடித்து எடுத்து இருக்கிறாய் நண்பா //
நன்றி நண்பா சுரேஸ்..
// sakthi said...
சொல்ல வார்த்தையில்லை
அருமைங்க...
மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள் சாரதியாரே... //
நன்றி சக்தி..
உங்கள் முன் இது சாதரணம்.
// நட்புடன் ஜமால் said...
அற்புதம் சாரதி ...
துவக்கத்தில்
அந்த கருப்பாகி போன கூந்தல் முதல்
ஞாபகத்தை இழந்ததாக கூறப்படும் உஷ்ணம் வரை
அருமை ... //
வாங்க ஜமால், உங்களின் பார்வைக்கு நன்றி
// சந்ரு said...
அசத்திட்டிங்க....
நம்ம பக்கமும் வந்து பாருங்க......
பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க...... //
கண்டிப்பா வரேன்..
// வினோத்கெளதம் said...
சாரதி அழகான அருமையான கவிதை..
ரசிகும்ப்படி எழுதி இருக்கீங்க.. //
நன்றி கெளதம்..
நமக்குள் "ங்க" தேவையில்லை.
உரிமையுடன்...
// S.A. நவாஸுதீன் said...
வாவ்வ். ரொம்ப நல்லா இருக்கு
நமக்கு நினைவுகள் மட்டுமே நிஜம்.
சூப்பர். அந்த உஷ்ணம்தான் இங்கு உயிர் வாழ வைக்கிறது. இல்லையேல் Freeze ஆகி இருப்போம். //
நன்றி நவாஸ்.
உங்களின் ஊக்கமும் நட்பும்
நீடிக்க வேண்டும்.
நன்றி
செய்திவளையம் குழுவினர்களுக்கு...
கவிதை நன்றாகவுள்ளது சாரதி.......
நன்றி திரு.முனைவர்.குணா.
Thanks to "Health is Wealth"
நல்ல கவிதை சாரதி..
Post a Comment