Thursday, May 14, 2009

வருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்...



நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது என் வீட்டுக்கு வந்த என் நண்பர்களில் ஒரு சிலரை என் உறவினர்களிடம் அறிமுகப்படுத்தும் போது,

“இவங்கெல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனவங்க.
வருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம் வாங்க போறாங்க”
என்று பெருமை பொங்க சொல்லித் தொலைத்து விட்டேன்..

இது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி சிறிதளவும் அப்போது சிந்திக்கவில்லை.

நீங்கெல்லாம் எங்க உருப்பட போறீங்க? என்று கல்லூரி
வாத்தியாரிடம் அடிக்கடி சாபம் வாங்குன பசங்க நாங்க...

பின்னாளில் படிப்பை முடித்துவிட்டு,
எந்த ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கும் எங்களிடமிருந்த அளவுக்கதிகமான புத்திகூர்மையும் சாதுர்யமும் தேவைப்படாத காரணத்தினால்,
வேலைத்தேடி சென்னை வந்திறங்கிய மூன்றாவது நாளே எனக்கும், சலாவுதினுக்கும் ஒரு வன்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
(அப்பாடா... தெளிவா சொல்லியாச்சு...)

மாதம் எட்டாயிரம் சம்பளம். சென்னையின் மிக நெரிசலான எக்மோரில் அமைந்திருந்தது அந்த அலுவலகம்...

“சென்னையின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆற்றல் மிகுந்த இளம் பொறியாளர்கள்
தேவை” (Young and Energetic Engineers)

ஹிந்து பத்திரிக்கையின் கடைக்கோடியில் வந்த அந்த விளம்பரத்தின் சாராம்சத்தை தான் மேலே நீங்கள் பார்த்தது.. அதன் விளைவே நாங்களிருவரும் அந்நிறுவனத்தில்...


முதல் நாள் மேலாளரை பார்ப்பதற்காக அலுவலகத்தின் வரவேற்பரையில் நெஞ்சு படபடக்க காத்திருக்கிறோம்...

ஒரு செவத்த பெண்ணொருத்தி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். சௌகார்பேட்டையை சேர்ந்தவளாய் இருக்கக்கூடும் என சலா என் காதில் கிசுகிசுத்தான்.

அந்த அலுவலகமே மிக வித்தியாசமாய் இருந்தது. ஏகப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் வருவதும் போவதுமாய் இருந்தனர். ஒரே கூத்தும் கும்மாளமுமாய் அந்த அலுவலகமே களை கட்டி இருந்தது.


அந்த மேலாளர் ஒரு வட இந்தியக்காரர். நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினார். ஒருவாரம் கடும் பயிற்சி என்றும், அதில் தேறினால் தான் கனடாவில் உள்ள தலைமையகத்திலிருந்து
பணி நியமன ஆணை வரும் என்று சொன்னார்.

மேலும் உங்கள் ஒவ்வொருவரையும் நம்பி கம்பெனி பல லட்சங்கள் முதலீடு செய்யப்போகிறது என்றும் சொன்னார்...


இறுதியாக அவர் சொன்னது தான் என்னையும் சலாவையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. “நாளை முதல் அனைவரும் டை அணிந்து வர வேண்டும்” என்று சொன்னது தான்...


எங்களை போன்று இன்னும் சில நல்லவர்களையும் வேலைக்கு தேர்ந்தெடுத்திருந்தனர்..


பிறகு எல்லோருக்கும் தனித்தனியாக ஒரு பயிற்றுனரை நியமித்தார். அகிலா என்ற பெண் தான் எனக்கு பயிற்றுனர் (ட்ரெயினர்). கொஞ்சம் அதட்டினாலே அழுதுவிடும் முகத்தோற்றம்... சொந்த ஊர் கடலூர் என்றும் தான் ஒரு M.B.A பட்டதாரி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.


சலாவுதின் ஆவலோடு எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. அந்த மேனேஜர் மிக விவரமானவன் போல, சலாவுக்கு ஒரு முரட்டுப் பையனை ட்ரெயினராக நியமித்திருந்தான்…


மறுநாள் 40 ருபாய்க்கு பாண்டி பஜாரில் வாங்கிய டையை கட்டிக்கொண்டு 8 மணிக்கெல்லாம் இருவரும் ஆபிசில் ஆஜரானோம்.


ஆண் பெண் என அனைவரும் கூடியிருக்கும் ஒரு ஹாலில் வைத்து அறிமுகப்படலம் முடிந்து சராமாரியாக எங்களை கேள்விகள் கேட்டார்கள்.


பிறகு ஆடியோ பிளேயரில் பாட்டை போட்டு எங்களை டான்ஸ் ஆடச்சொன்னார்கள். எனக்கு அப்போது தான் லேசாக சந்தேகம் வந்தது. இது உண்மையான கம்பெனி தானா?

ஒரு குண்டு பெண் வந்து எவ்வித சங்கோஜமில்லாமல் கட்டிடம் அதிர ஆடிட்டு போனாள். கூட்டமே அவளுடைய ஆட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது.


அடுத்து சலாவுதினை ஆடச்சொன்னார்கள். அவனும் நடுவில் போய் நின்று “தாண்டியா ஆட்டம் ஆட” பாட்டுக்கு அமர்க்களமாய் ஆடி அப்ளாசை அள்ளிக்கொண்டான்.

அடுத்தது என்னுடைய முறை.
கைகாலெல்லாம் உதற என்னால் ஆடமுடியாது என வம்படியாய் மறுத்து விட்டேன்.. எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள்..

வேலையே இல்லையென்றாலும் பரவாயில்லை முடியாது என்ற நிலமைக்கு வந்துவிட்டேன்...


பிறகு என்னை ஒதுக்கிவிட்டு காலை 11 மணி வரை பல விளையாட்டுக்கள். 11 மணிக்கு மேனேஜரும் கூட்டத்தில் சேர்ந்துக்கொண்டான்.. அடுத்த அரைமணி நேரம் ஒரே சொற்பொழிவு.


“TODAY’S OTHER PEOPLE MONEY IS TOMORROW OUR’S MONEY”

“இன்று அடுத்தவனின் பணம், நாளை முதல் நம் பணம்” என கூட்டமே பெருங்குரலெடுத்து அலறியது..


பின்னர் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாய் வெளியே கிளம்பினார்கள்...


அகிலா என்னை மின்சார ரயிலேற்றி தாம்பரத்தில் வந்திறக்கினாள். ரயிலில் டை அணிந்து வந்த என்னை கூட்டமே வித்தியாசமாய் பார்த்தது.. வழி நெடுக அகிலாவின் டிப்ஸ் மழை வேறு...



தாம்பரத்தில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவிலிருந்து வீடுவீடாகச் சென்று கதவைத்தட்டி


வீ ஆர் கம்மிங் ஃபிரம் வோடாஃபோன் என்று ஆரம்பித்து நடையாய் நடந்து சிம்கார்டு விக்கிற வேலை என்று தெரிய எனக்கு வெகுநேரம் ஆனது..
வாழ்க்கையே வெறுத்து போனது..


Process Control வாத்தியார் என் மனத்திரையில் வந்து பலமாய் கைதட்டி சிரித்துவிட்டு போனார்...
வாத்தியார் சாபம் பலிச்சுடுமோ..
லேசாக பயம் வந்தது..


மறுநாள் காலை நானும் சலாவும் எட்டு மணிக்கப்புறமும் தூங்கி கொண்டிருக்க என் செல்போன் அழைத்தது.. எடுத்து பார்த்தேன்..
அழைத்தது அகிலாதான்... என்ன சொல்வது என்று தெரியாமல்,
அருகிலிருக்கும் சலாவை உலுக்கி
“டேய் ஆபிசுக்கு கூப்பிடுறாங்கடா”
என்று அவனிடம் கொடுத்தேன்.


அவன் அதை அசால்டாக வாங்கி, அவன் அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையை உபயோகித்தான். போங்கடி....................

அதன்பிறகு அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை...


நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் அது.



இப்போதும்கூட எனக்கு ஏதேனும் பணி சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டால் வெறும் எட்டாயிரம் காசுக்காக நானும் அவனும் சென்னை வீதிகளில் சிம்கார்டு விற்றதை நினைத்து என்னை நானே தேற்றிக்கொள்வேன்....


வேலைத்தேடி பற்பல கனவுகளோடு சென்னை வந்திறங்கும்
பலரை வந்தவுடன் வாரியணைத்துக்கொள்வது மார்க்கெட்டிங் துறை தான்...


இன்னும் அந்த கும்பல் எங்களைப் போன்ற பல பேரை தேடிக்கொண்டிருக்கும் அதற்காகவே இந்த பதிவு... இளைஞர்களே விழிப்புடன் இருங்கள்.
அந்த நயவஞ்சக கூட்டம் பற்றி நாளை சொல்கிறேன்...

42 comments:

யாத்ரீகன் said...

hmmmmmmm.. awaiting for the next post

sarathy said...

வாங்க யாத்ரீகன்...
கண்டிப்பா நாளைக்கு சொல்றேன்...

siva said...

எவ்ளோ நாளைக்கு தான் நாங்க இந்த கொடுமை எல்லாம் அனுபவிக்கிறது??

கண்ணா.. said...

நல்ல பதிவு...

இது போன்று சம்பவங்கள் நாம் அறிந்திருந்தாலும் இன்னும் இது குறித்த விழிப்புணர்வு போதாது

ஜியா said...

ennada matterye illaama marketing velaiyaiye kevalamaa solreengannu paathen.. waiting for tomo's post...

S.A. நவாஸுதீன் said...

வீ ஆர் கம்மிங் ஃபிரம் வோடாஃபோன் என்று ஆரம்பித்து நடையாய் நடந்து சிம்கார்டு விக்கிற வேலை என்று தெரிய எனக்கு வெகுநேரம் ஆனது..
வாழ்க்கையே வெறுத்து போனது..

சூப்பர். எதார்த்தம். அதே சமயம் நல்ல நகைச்சுவையோடு எழுதி இருக்கின்றீர்கள். ரசித்தேன், சிரித்தேன்.

S.A. நவாஸுதீன் said...

Process Control வாத்தியார் என் மனத்திரையில் வந்து பலமாய் கைதட்டி சிரித்துவிட்டு போனார்...
வாத்தியார் சாபம் பலிச்சுடுமோ..
லேசாக பயம் வந்தது..

ஹா ஹா ஹா. நீங்களும் நம்ம கேசுதானா தல. சரிதான்

அப்துல்மாலிக் said...

ஹா ஹா ரசித்தேன்... மக்கா நிறையபேறு இப்படி கஷ்டப்பட்டுதான் வந்தீங்களா

அப்பூ இப்படி நிறைய பதிவுகள் போடலாம்... சரக்கு நிறைய இருக்கப்பு.. வலிகள், வேதனைகள்..

நல்ல ரசனையான எழுத்தோட்டம்

அடிப்பட்டால்தானே அதன் பின்விளைவு தெரியும்.. நல்லா சொன்னீங்க‌

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

ஹா ஹா ரசித்தேன்... மக்கா நிறையபேறு இப்படி கஷ்டப்பட்டுதான் வந்தீங்களா

அப்பூ இப்படி நிறைய பதிவுகள் போடலாம்... சரக்கு நிறைய இருக்கப்பு.. வலிகள், வேதனைகள்..

நல்ல ரசனையான எழுத்தோட்டம்

அடிப்பட்டால்தானே அதன் பின்விளைவு தெரியும்.. நல்லா சொன்னீங்க‌

என்ன மாப்ள, ராயப்பேட்டை Mansion வாழ்க்கை ஞாபகம் வந்துடுச்சா?

வினோத் கெளதம் said...

Nalla irukkunga..arumayya eluthi irukkinga..

asfar said...

very nice..... I too have same experiece but i understood while dancing time, so suddently I decided to disconnect before starting thier activities before 3 years at Sri Lanka.....

have a nice day best regards.....

கலையரசன் said...

பதிவு நன்று! நாளை வரை காத்திருக்கிறேன்/
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!

நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com

DHANS said...

i dont know why you given such a bad face for marketting field. it has a great potential to earn more that SW engg.

selling sim card may be the initial stage once u learned the marketing technique you can sell anything. dont ever feel bad about any job. if you dont like just leave it but dont ever tell the marketing is a bad job.

Vishnu - விஷ்ணு said...

அது ஒரு கனா காலமா

Sathish said...

YES, VERY NICE POST.

sarathy said...

//Kanna said...

நல்ல பதிவு...

இது போன்று சம்பவங்கள் நாம் அறிந்திருந்தாலும் இன்னும் இது குறித்த விழிப்புணர்வு போதாது//

நன்றி கண்ணா...
நாம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்...

Thiyagarajan said...

y blood same blood :).
I too had the same exp.they offered 40 rs/day for me. No salary and only sales comission. Even I too sold Hutch corporate connections in Mylapore area.
The company was in Egmore.. After 1 month I quitted.
One more thing, the comment box has some issues with ie7, couldn't post the comment with my google account

Thiyagarajan said...

you too in the egmore company !!!!
I worked with them during Aug 2004. Company name is "Pri------- Comm-----". Even 5 years latter I couldn't forget those days...
//சலாவுக்கு ஒரு முரட்டுப் பையனை ட்ரெயினராக நியமித்திருந்தான்// - Even for me too
Expecting your next post

Suresh said...

நீங்களுமா ;)

ers said...

வேலைத்தேடி பற்பல கனவுகளோடு சென்னை வந்திறங்கும்
பலரை வந்தவுடன் வாரியணைத்துக்கொள்வது மார்க்கெட்டிங் துறை தான்...


அண்ணாச்சி உங்க ஏமாற்றத்தையும், தவிப்பையும் வெளிப்படுத்தி இருக்கீங்க... அதான் நானெல்லாம் ஊர்லேயே பொட்டி தட்டுற யாவரம் பாக்கலாம்னு உக்கார்ந்திட்டேன்.

KRICONS said...

வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது

sarathy said...

// ஜியா said...
ennada matterye illaama marketing velaiyaiye kevalamaa solreengannu paathen.. waiting for tomo's post... //


நன்றி ஜியா..

நான் மார்க்கெட்டிங் வேலையை குறை சொல்லவில்லை.

தொழில்நுட்ப வேலை என்று விளம்பரபடுத்தி வேலைக்கு
ஆள் எடுத்து சிம்கார்ட் விக்கச் சொன்னா என்ன பண்றது அவர்களை....

sarathy said...

// S.A. நவாஸுதீன் said...
சூப்பர். எதார்த்தம். அதே சமயம் நல்ல நகைச்சுவையோடு எழுதி இருக்கின்றீர்கள். ரசித்தேன், சிரித்தேன். //

நன்றி.. S.A. நவாஸுதீன்.. உங்கள் வருகைக்கு...

Anonymous said...

you are absolutely right. I was been for one days with the same group in Bangalore. But my case was much worst than you. I am a BE mech graduate and they put me to sell phones and gift items with one of trainer (i forgot her name). When i wanted to come out from the next day, they refused to hand over my degree certificate. So i brought my brother and his friends to their office and collected my certificates. It is good you post this and it will help for new graduates.

sarathy said...

//அபுஅஃப்ஸர் said...
ஹா ஹா ரசித்தேன்... மக்கா நிறையபேறு இப்படி கஷ்டப்பட்டுதான் வந்தீங்களா

அப்பூ இப்படி நிறைய பதிவுகள் போடலாம்... சரக்கு நிறைய இருக்கப்பு.. வலிகள், வேதனைகள்..

நல்ல ரசனையான எழுத்தோட்டம்

அடிப்பட்டால்தானே அதன் பின்விளைவு தெரியும்.. நல்லா சொன்னீங்க‌//

வாங்க அபுஅஃப்ஸர்...
பட்டதால் தானே இங்கே கொட்டியிருக்கிறேன்..
உங்கள் பாராட்டுக்கு நன்றி..

shajahanpm said...

அப்புறம் அந்த ஹால் ல உள்ள மணிய அடுச்சுறுப்பானுகளே.. கேட்டா நேத்து பத்து சிம்கார்ட் வித்ததனால ன்னு சொல்லி இருப்பானுகளே .. நானும் போனேனே.. ஒரு தடவ..
சென்ட்ரல் பூரா அலைய விட்டானுக.

கல்கி said...

ஹா ஹா ஹா... ஹி ஹி ஹி...

நீங்க எக்மோரா... நான் ஆழ்வார்பேட்டை.... :)

உங்களுக்கு ஒரு நாள்ல புரிஞ்சது, எனக்கு அண்ணனுங்க வில்லனுங்க ஆகி நண்பர்கள் எதிரிகள் ஆனதுக்கப்புறம் தான் புரிஞ்சது... :-(

என்னோட டிரைனர் கொடுத்த கணக்குபடி கேம்பஸ்ல வேலைக்கு சேர்ந்த நண்பர்களைவிட மாத வருமானம் அதிகம். ஆசை யார விட்டது... மாடு மாதிரி உழைச்சி, நான் முதல் மாசம் வாங்குன சம்பளம் 11500 (வரிகட்டியது போக)
(சில நேரம் நாம வித்த கார்டை டிரைனர் வித்தாமாதிரி காட்டிடுவானுங்க)
கொஞ்ச நாள் ஆனப்புறம் தான் தெரிஞ்சது, எல்லாம் ஏமாத்துகாரனுங்கன்னு.

பாப்போம் இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாத்துறானுங்கன்னு.

sarathy said...

//S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

ஹா ஹா ரசித்தேன்... மக்கா நிறையபேறு இப்படி கஷ்டப்பட்டுதான் வந்தீங்களா


என்ன மாப்ள, ராயப்பேட்டை Mansion வாழ்க்கை ஞாபகம் வந்துடுச்சா? //


நீங்க ராயப்பேடேடையா.. நாங்க BROADWAY Y.K MANSION...

sarathy said...

// vinoth gowtham said...
Nalla irukkunga..arumayya eluthi irukkinga..

asfar said...
very nice.....

விஷ்ணு. said...
அது ஒரு கனா காலமா

Sathish said...
YES, VERY NICE POST.

கலையரசன் said...
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!! //


நன்றி... வினோத் கௌதம், அஸ்பர், கலையரசன், விஸ்ணு, சதிஸ், சுரேசு...
என்னை ஊக்கப்படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி...

sarathy said...

// DHANS said...
i dont know why you given such a bad face for marketting field. it has a great potential to earn more that SW engg.

selling sim card may be the initial stage once u learned the marketing technique you can sell anything. dont ever feel bad about any job. if you dont like just leave it but dont ever tell the marketing is a bad job.//


உங்க ஆதங்கம் எனக்கு புரியுது...
நான் மறுபடியும் சொல்கிறேன்..
மார்க்கெட்டிங் வேலையை குறை சொல்லவில்லை.

தொழில்நுட்ப வேலை என்று விளம்பரபடுத்தி வேலைக்கு
ஆள் எடுத்து சிம்கார்டு விக்கச் சொன்ன அவர்களை
பற்றித்தான் எச்சரிக்கிறேன்...
ஆரம்பத்திலே சொல்லியிருந்தா நாங்க வேற வேலைய
தேடி போயிருப்போம் ல......

sarathy said...

// Thiyagarajan said...

y blood same blood :).
I too had the same exp.they offered 40 rs/day for me. No salary and only sales comission. Even I too sold Hutch corporate connections in Mylapore area.
The company was in Egmore.. After 1 month I quitted.
One more thing, the comment box has some issues with ie7, couldn't post the comment with my google account


Thiyagarajan said...
you too in the egmore company !!!!
I worked with them during Aug 2004. Company name is "Pri------- Comm-----". Even 5 years latter I couldn't forget those days...
//சலாவுக்கு ஒரு முரட்டுப் பையனை ட்ரெயினராக நியமித்திருந்தான்// - Even for me too
Expecting your next post //



தியாகராஜன் உங்களையும் ஏமாத்திட்டாங்களா அந்த பாவிகள்...
நீங்க சொன்ன கம்பெனியும் நான் போனதும் ஒரே கம்பெனி தான்...
பேரு தான் வேற..
பாடாய் படுத்திட்டாங்க..
ஆனா ஒரே ஆறுதல் மதியம் கம்பெனி செலவுல எங்களுக்கு சாப்பாடு
வாங்கி தந்தானுங்க...
ஒரு மாசம் எப்படி தாக்கு பிடிச்சீங்க?? பெரிய ஆளுதான் நீங்க..
இப்போ என்ன பண்றீங்க??

sarathy said...

// Anonymous said...
you are absolutely right. I was been for one days with the same group in Bangalore. But my case was much worst than you. I am a BE mech graduate and they put me to sell phones and gift items with one of trainer (i forgot her name). When i wanted to come out from the next day, they refused to hand over my degree certificate. So i brought my brother and his friends to their office and collected my certificates. It is good you post this and it will help for new graduates. //


உங்களுக்குமா?
பெங்களூர்லயுமா இருக்காங்க அவிங்க?

பயங்கர அட்டூழியம் பண்ணியிருக்காங்க போல...
உங்க பேர சொல்லவே இல்லை..

sarathy said...

// shajahanpm said...
அப்புறம் அந்த ஹால் ல உள்ள மணிய அடுச்சுறுப்பானுகளே.. கேட்டா நேத்து பத்து சிம்கார்ட் வித்ததனால ன்னு சொல்லி இருப்பானுகளே .. நானும் போனேனே.. ஒரு தடவ..
சென்ட்ரல் பூரா அலைய விட்டானுக.//


ஆமாம் சாஜகான்.. மணியை அடிச்சானுங்க...
வீக் எண்ட் பார்ட்டி கூட உண்டாம்...
உங்களையும் விடலையா?
பரவாயில்ல நீங்க சென்டரல் மட்டும்தானே அலைஞ்சீங்க...

sarathy said...

// கல்கி said...

ஹா ஹா ஹா... ஹி ஹி ஹி...

நீங்க எக்மோரா... நான் ஆழ்வார்பேட்டை.... :)

உங்களுக்கு ஒரு நாள்ல புரிஞ்சது, எனக்கு அண்ணனுங்க வில்லனுங்க ஆகி நண்பர்கள் எதிரிகள் ஆனதுக்கப்புறம் தான் புரிஞ்சது... :-(

என்னோட டிரைனர் கொடுத்த கணக்குபடி கேம்பஸ்ல வேலைக்கு சேர்ந்த நண்பர்களைவிட மாத வருமானம் அதிகம். ஆசை யார விட்டது... மாடு மாதிரி உழைச்சி, நான் முதல் மாசம் வாங்குன சம்பளம் 11500 (வரிகட்டியது போக)
(சில நேரம் நாம வித்த கார்டை டிரைனர் வித்தாமாதிரி காட்டிடுவானுங்க)
கொஞ்ச நாள் ஆனப்புறம் தான் தெரிஞ்சது, எல்லாம் ஏமாத்துகாரனுங்கன்னு.

பாப்போம் இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாத்துறானுங்கன்னு.//


வாங்க கல்கி...
11500 ரூபாய் சம்பளம் வேற வாங்கியாச்சா..
அப்டின்னா எவ்ளே சிரமப்பட்டு இருக்கனும்?
எங்கெல்லாம் அலைஞ்சிருக்கனும்?
எனக்கு அவனுங்க வேலை கொடுத்தவுடனே
வீட்டுக்கெல்லாம் போன் பண்ணி ரொம்ப
அழிச்சாட்டியம் பண்ணிட்டேன்..
பின்னே கணடா ன்னா சும்மாவா?
என் ட்ரைனர் பயங்கர சாதுவா இருந்ததுனால
என் பாடு பரவாயில்ல..

sarathy said...

KRICONS said...
வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது

நன்றி.. KRICONS..

நீங்க சொன்ன தகவல பார்த்து நம்பமுடியாம தான்
விகடன் ல போய் பார்த்தேன். எனக்கே ஆச்சர்யம்
தாங்கல..
நன்றிகள் பல உங்களுக்கு..

SCCOBY BLOGSPOT.IN said...

mikavum payanulla pathivu parattukkal
continue your blog very interesting to read so many will follow
www.salemscooby,blogspot.com

ஜியா said...

//தொழில்நுட்ப வேலை என்று விளம்பரபடுத்தி வேலைக்கு
ஆள் எடுத்து சிம்கார்ட் விக்கச் சொன்னா என்ன பண்றது அவர்களை....//

ஐ எம் த சாரி.... கடைசிக்கு வந்ததும் மொதல்ல வாசிச்சது மறந்துப் போச்சு... இப்ப புரியுதுங்க :(( எம்புட்டு கஷ்டம்னு...

ganesh said...

சாரதி ஐயா....நான் கூட உங்களை போல அடி பட்டவன் தான்.. hsbc credit card விற்க சொன்னாங்க...நான் ஒரு mech engg graduate....என்னோட ட்ரயினர் முதல் நாளே புகழ்ந்து பேசினான்...ஆனா செம மொக்கை எனக்குதான்...but i openly said them that day itslf am not seeking this one and just i left out... its not bad... its first step... now am doing own business in my field only...

முதல் நாள் மேலாளரை பார்ப்பதற்காக அலுவலகத்தின் வரவேற்பரையில் நெஞ்சு படபடக்க காத்திருக்கிறோம்...

ஒரு செவத்த பெண்ணொருத்தி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். சௌகார்பேட்டையை சேர்ந்தவளாய் இருக்கக்கூடும் என சலா என் காதில் கிசுகிசுத்தான்.

அந்த அலுவலகமே மிக வித்தியாசமாய் இருந்தது. ஏகப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் வருவதும் போவதுமாய் இருந்தனர். ஒரே கூத்தும் கும்மாளமுமாய் அந்த அலுவலகமே களை கட்டி இருந்தது.


அந்த மேலாளர் ஒரு வட இந்தியக்காரர். நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினார். ஒருவாரம் கடும் பயிற்சி என்றும், அதில் தேறினால் தான் கனடாவில் உள்ள தலைமையகத்திலிருந்து
பணி நியமன ஆணை வரும் என்று சொன்னார்.

//இதே கதை தான் எனக்கும்.....//

தமிழ். சரவணன் said...

//இளைஞர்களே விழிப்புடன் இருங்கள்.
அந்த நயவஞ்சக கூட்டம் பற்றி நாளை சொல்கிறேன்... //

இது போல் ஆயிரம் மாயிரம் கூட்டக்ங்கள் சுத்திக்ககொண்டிருக்கின்றது... குறிப்பாக கிரமப்புற இளைஞர்களை நம்ப வைத்து கழுத்தஅறுத்து பால்பண்ணிவிடும் கூட்டங்களும் ஏராளம் ஏராளம்

சாரதி said...

// LIC SUNDARA MURTHY said...
mikavum payanulla pathivu parattukkal continue your blog very interesting to read so many will follow//

வாங்க சுந்தரமூர்த்தி சார்..
உங்கள் பாராட்டுக்கு நன்றி...


// ஜியா said...

/தொழில்நுட்ப வேலை என்று விளம்பரபடுத்தி வேலைக்கு
ஆள் எடுத்து சிம்கார்ட் விக்கச் சொன்னா என்ன பண்றது அவர்களை..../

ஐ எம் த சாரி.... கடைசிக்கு வந்ததும் மொதல்ல வாசிச்சது மறந்துப் போச்சு... இப்ப புரியுதுங்க :(( எம்புட்டு கஷ்டம்னு... //

என்ன பன்றது ஜீ. எல்லாமே ஒரு நல்ல அனுபவம்தான்...

சாரதி said...

ganesh said..
// சாரதி ஐயா....நான் கூட உங்களை போல அடி பட்டவன் தான்.. hsbc credit card விற்க சொன்னாங்க...நான் ஒரு mech engg graduate....என்னோட ட்ரயினர் முதல் நாளே புகழ்ந்து பேசினான்...ஆனா செம மொக்கை எனக்குதான்...but i openly said them that day itslf am not seeking this one and just i left out... its not bad... its first step... now am doing own business in my field only...//
வியாபாரம் அமோகமாக நடக்க என் வாழ்த்துக்கள் கணேஷ்...
நான் சின்ன பையன் தான் "ஐயா"-லாம் வேண்டாம் நண்பா...


//தமிழ். சரவணன் said...
இது போல் ஆயிரம் மாயிரம் கூட்டங்கள் சுத்திக்ககொண்டிருக்கின்றது... குறிப்பாக கிரமப்புற இளைஞர்களை நம்ப வைத்து கழுத்தஅறுத்து பால்பண்ணிவிடும் கூட்டங்களும் ஏராளம் ஏராளம்..//

ஆமாம் சரவணன்... வில்லனுங்க அதிகம்தான்...
சரி இதை விடுங்க...
உங்க கதை படு பயங்கரமா இருக்கே.. இப்படியெல்லாம பொண்ணுங்க இருக்காங்க????

Nila said...

anna, good blog nice to see.. I will follow this from today... all the best.

செய்தியோடை...