Saturday, March 7, 2009

26 கி.மீ இடைவெளியில் எத்தனை மாற்றம்......

பஹ்ரைன் Vs சௌதி அரேபியா




பஹ்ரைன்...

ஒரு குறும்தீவு இது.சுற்றிலும் கடல்.

நடுவே கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய்.

பளீர்சாலைகள்.

இருமருங்கிலும் செயற்கையாய் பச்சை ஆக்கியிருக்கிறார்கள்.

அரபு நாடென்றாலும் ரொம்ப கெடுபிடியில்லை.

அழகிய நங்கைகள் நவ நாகரீக உடைகளில் ஆங்காங்கே உலாவருகிறார்கள்.

சந்தேகித்தால் முழு பயணப்பெட்டியையும் விமானநிலயத்தில் சோதிக்கிறார்கள்.

போதை வஸ்துக்களுக்காக கடுமையான சோதனை.

அப்பப்போ ஏதாவதொரு திருவிழா நடந்துகொண்டேஇருக்கிறது.

பஹ்ரைனில் வாழ்கை கொஞ்சம் ஜாலிதான்.

இங்கிருந்து தரைவழியாகவே போய்விடலாம் சௌதி அரேபியாவுக்கு.

பஹ்ரைன் கடல் தீவிலிருந்து சௌதிஅராபிய நிலப்பரப்புக்கு கடல்மேல் நீண்ட பாலம் அமைத்திருக்கிறார்கள்.

சுமார் 26 கிலோமீட்டர்கள்.

சுற்றிலும் கடலை பார்த்த படியே பயணிக்கலாம். நடுவில் சௌதியில் நுழையும் போது கெடுபிடி ஆரம்பிக்கிறது.

உங்கள் பயணபெட்டிகள் சுத்தமாய் அலசப்படும்.

எதைவேண்டுமானாலும் அவர்கள் குப்பையாய் தூக்கி எறியலாம்.

பெண்கள் முழு பர்தா அணிய துவங்கிவிடுகின்றனர்.

கருப்பாய் முழுநீள அங்கி அவ்ளோதான்.

வாகனங்களெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பழம் பெரும் வாகனங்கள்.
மண்ணும் சேறும் அப்பியிருக்கிறது.

பெரும்பாலான வாகனங்களில் பல பெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாய் குந்தியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானியரும்,பங்ளாதேசியர்களும் இந்தியர்களும் அவர்களை ஏறெடுத்துக்கூட பார்ப்பது இல்லை.காரணம் பயம்.

எல்லோருக்கும் சட்டமும்,விதிகளும் நடப்பு நிலவரங்களும் நன்கு தெரிகிறது.
முழு பரிசோதனைக்கு பின் சௌதிக்குள் நுழைகின்றோம்..


"டேய் நீ ரொம்ப குடுத்துவச்சவன்" என என் தோழி சொன்னது ஏனோ என் நினைவுக்கு வந்தது...

நீண்ட பரந்த சாலைகள்.இருபுறமும் குப்பைகள்...

ஓடும் வாகனங்களும் அப்படியே...

அல்கோபார்,தமாம் என்று அந்த பயணம் தொடர்கிறது...

எல்லாமே இரண்டு இரண்டு...

பெண்களுக்கொரு மார்க்கெட்.

ஆண்களுக்கொரு மார்க்கெட் இப்படியாக எல்லாம் இரண்டு.... A.T.M உட்பட...

தனியாக வேலை செய்யும் ஆண்கள் பெரிய மூடப்பட்ட சுற்று சுவர்களுக்குள் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு காம்ப்பவுண்டும் ஒரு உலகம்.

அராம்கோ-பெட்ரோல் பெரும்பாலான தொழில்கள் இதை சார்ந்தே இருக்கின்றன.

கடுமையாக உழைக்கும் இந்தியர்களை பார்க்கமுடிகிறது.

சாலைகளில் பெண்களை காண முடிவதில்லை. கண்டாலும்?????

கொஞ்சம் சுதந்திரமாய்(?) இருக்க அப்பப்போ பஹ்ரைன் வந்து செல்கிறார்கள் பல சௌதி குடிமக்கள்...







நம்ம ஊர் ஆட்கள் ஒராண்டோ அல்லது ஈராண்டோ கழித்து விடுமுறையில் இந்தியா போக ஏர்போர்ட் நுழைந்ததும் அவர்கள் சந்தோசம் பார்க்க வேண்டுமே மகிழ்ச்சி தெளிவாய் தெரிகிறது.

ஒருகணம் சிறு பெருமூச்சுவிட்டு இதயம் அடங்குகிறது.

ஒருகாலத்தில் ஆடிய ஆட்டமென்ன இப்போ இது தான் நம் வாழ்கை.

தாவணி பெண்களும்,
மல்லிகை வாசமும் மறந்தே போய்விட்டது...

இப்படித்தான் எழுதியிருக்கிறது.இப்படிதான் நாம்
பயணித்தாகவேண்டும்....

அந்நிய தேசத்தில் அடிமையாய் நான்..

சுற்றலும் மனிதம் அற்றுப்போன மனிதர்கள்..

2 comments:

Anonymous said...

சாரதி,

உன்னுடைய கவிதைகள், கட்டுரைகள்
கடல் கடந்து சென்று உழைக்கும் தமிழர்களின்
மனத்தினை எதிரொளிக்கும்
கண்ணாடி பிம்பங்கள் போல் உள்ளது...!

வாழ்த்துகள்!!

நாகா said...

வருத்தம் வேண்டாம் தோழரே.. உங்கள் எழுத்து அருமையாக உள்ளது.. தற்போதுதான் உங்கள் வலைப்பூவை மேயத்துவங்கியிருக்கிறேன்.. தொடர் பின்னூட்டங்களால் உங்களைத் தாக்க உத்தேசம்..

செய்தியோடை...